For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி சீனிவாச பெருமாள் கல்யாணம் உற்சவம் பாருங்க..கெட்டி மேளம் கொட்டும்..டிக்கெட் புக் பண்ணுங்க

Google Oneindia Tamil News

சென்னை: தெய்வீக திருமணங்களைப் பார்த்தால் கல்யாண வைபோகம் கைகூடி வரும் என்று சொல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவின் பணக்கார தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் தெய்வம் ஏழுமலையான் கோவில். 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள்,இலவச தரிசனத்திற்காக டோக்கன்களை வாங்கிய பக்தர்கள் டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.

திருப்பதிக்கு வந்து இலவச தரிசன டோக்கன் கிடைக்காத பக்தர்கள் திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டப வழியாக செல்லும் பக்தர்கள் சனி, ஞாயிறுகிழமைகளில் 40 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தங்கும் அறைக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் பக்தர்கள் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர்.

நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ.. பாஜக நாராயணன் திருப்பதி நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ.. பாஜக நாராயணன் திருப்பதி

 கல்யாண உற்சவம்

கல்யாண உற்சவம்

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திற்கான டிக்கெட்டுகளை நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம்,ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாம். இந்த சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு

ஆன்லைன் முன்பதிவு

சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் மதியம் கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. கல்யாண உற்சவத்தில் தம்பதிகள் பங்கேற்று சுவாமியின் அருளைப் பெறுகின்றனர். டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் w.w.w.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட சேவைகளில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கலந்து கொண்ட பின் பக்தர்கள் வேறொரு நாளில் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை நேரடியாக வழிபட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 மாத டிக்கெட்டுகள் முடிந்தது

1 மாத டிக்கெட்டுகள் முடிந்தது

இந்த நிலையில், டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காலை 10 மணி முதலே பக்தர்கள் காத்திருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். வெறும் 40 நிமிடங்களிலேயே 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு டிக்கெட்களும் தீர்ந்து போய்விட்டதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 365 நாட்களும் உற்சவங்கள்

365 நாட்களும் உற்சவங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தின உற்சவம், வார உற்சவம், மாதாந்திர உற்சவம்,வருடாந்திர உற்சவங்கள் என எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு 470 விழாக்கள், உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலை 'நித்ய கல்யாணம், பச்சை தோரணம்' கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர்.

English summary
If you see divine marriages, it is said that the wedding ceremony will come hand in hand. Devotees who want to have darshan of the Kalyana Utsava service to be held next month at the Tirupati Elumalayan Temple can book online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X