பால்கனியில் துளசி.. இந்த திசையில் மட்டும் துளசி செடியை வைக்காதீங்க.. ஆன்மீக பலன் தரும் துளசி இலைகள்
சென்னை: துளசி செடிகளை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் ஆன்மீக பலன்கள் என்னென்ன தெரியுமா? துளசி செடிகள் எந்த திசையில் வைத்து வளர்க்கலாம்? வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் என்னென்ன தெரியுமா?
ஏராளமானோர் தங்களது வீடுகளின் பால்கனிகள், மொட்டை மாடிகள், தோட்டங்களில் துளசிச்செடிகளை வளர்க்கிறார்கள்... இப்படி வீட்டில் துளசி செடியை வைப்பதால், சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. சுற்றுப்புறம் தூய்மையாகிறது..

துளசி செடிகள்: துளசி இருந்தாலே, அங்கு அமைதி, செல்வம், தழைத்தோடும் என்பது நம்பிக்கை. யாருடைய வீட்டில் துளசிசெடிகள் நிறைந்து காணப்படுகிறதோ, அந்த இடம் புண்ணியமான திருத்தலமாக கருதப்படுகிறது.. துளசி நிறைந்துள்ள இடத்தில், அகால மரணம், வியாதி எதுவுமே நெருங்காது.
வீட்டில் துளசிமாடம் கட்டி, துளசியை அம்மனாக கருதி வழிபடுபவர்களும் உண்டு.. குறிப்பாக, வரலட்சுமி விரதத்தில் அம்மன் முகம் வைத்து வழிபடுவதுபோல், துளசி மாடத்திலும் அம்மன் முகத்தை பதிய வைத்து வழிபடுவார்கள்.. துளசி மாடம் வைத்திருப்பவர்கள் தவறாமல் விளக்கேற்றி, காலை மாலை துளசி பூஜை செய்து, துளசி மாடத்தை வலம் வந்தால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி விடுகின்றன.. எதிலும் வெற்றி கிடைக்கும்.
துளசி இலைகள்: எப்போதுமே தன்னுடனிருக்கும் எந்தப்பொருளின் மதிப்பையும், பல மடங்கு கூட்டும் தன்மை துளசிக்கு உண்டு.. அதாவது தன்னை சேர்ந்த எதையும் தோஷங்களை நீக்கிப் புனிதப்படுத்திவிடும் ஆற்றலுடையது துளசி. திருமாலின் மார்பில் நீங்காது நின்றாடுவது இந்த துளசி செடிதான்.. எனவே, துளசி செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்து பூஜை செய்ய வேண்டும்.
துளசி இலைகளை இரவு நேரத்தில் பறிக்கக் கூடாது என்பார்கள். முடிந்தால் அதிகாலையிலேயே பறித்துவிட வேண்டும்.. புனித நாட்களிலும் துளசியைப் பறிக்கும் வழக்கமில்லை. துளசியை எப்போதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளியில் பறிக்கக்கூடாது என்பார்கள்.. அதேபோல, சதுர்த்தி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி நாட்களிலும் துளசியை பறிக்கக்கூடாது..
திருநாமம்: பூஜைகளில், துளசியை மட்டுமே பயன்படுத்தாமல், இதன் விதை, தண்டு, வேர், இலைகள் போன்றவற்றையும் சேர்த்தே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். துளசியை பறிக்கும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே பறிக்க வேண்டுமாம்.
துளசிச்செடியை கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.. மிகச்சிறந்த கிருமிநாசினியான துளசியின்மீது, சூரியக்கதிர்கள் படும்போது, ஏராளமான நன்மைகள் அந்த இடத்தை சுற்றி படர்கிறது.. நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறது.. ஒருவேளை, கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்க முடியாவிட்டால் வடகிழக்கு திசையில் வைக்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வடதிசையில் துளசிச்செடியை வளர்க்கலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது.
துளசி மாடம்: துளசி மாடத்தை ஈசானிய திசையில் வடகிழக்கில் வைக்கலாம்.. அப்படி அமையாவிட்டால் வீட்டின் முற்றத்திலோ மற்ற தோஷம் இல்லாத இடத்திலோ வைக்கலாம். ஆனால், கழிவறைக்கு பக்கத்தில் வைக்கவே கூடாது.
சமையலறை. உஷ்ணமான, புகை வரும் இடங்கள், தூசி வெளியேறும் இடங்களில் துளசி செடியை வைக்கக் கூடாது. அதேபோல, படிக்கட்டுகளுக்கு கீழே, தாழ்வான இடங்களில் ஒரு போதும் துளசியை வைக்கக் கூடாது. இது வளர்ச்சியை தடுத்துவிடும்.
சிலசமயம், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட துளசி செடிகளை வைக்கலாமா? நல்லதா கெட்டதா? என்ற சந்தேகம் எழும்.. ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வீட்டில் தாராளமாக வளர்க்கலாம்... ஆனால் ஒருசில விதிகள் இருக்கின்றன.. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை நட வேண்டும் என்றால் 3, 5, 7 என்ற ஒற்றைப்படை எண்களில்தான் நட வேண்டுமாம். அப்படி வைத்தால், எந்த காரியம் செய்தாலும் அது சுபமாக முடியும் என்பது நம்பிக்கையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications