வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் ராஜ யோகம்.. குலதெய்வ சாபம் நீங்க உதவும் வாழை நார் திரி பரிகாரம்
சென்னை: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் தங்க வேண்டுமானால் தினந்தோறும் காலை, மாலை என 2 வேளைகளிலும் விளக்கேற்ற வேண்டும் என்பார்கள். விளக்கேற்றும்போது எண்ணெய்களுக்கு தரப்படும் முக்கியத்துவம்போலவே, திரிகளுக்கும் தரவேண்டுமாம். அந்தவகையில், வாழைத்தண்டு திரியால் விளக்கேற்றினால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றவேண்டுமானால் காலை 4 மணி முதல் 6 மணி வரை அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு ஏற்றி வைக்கலாம்..

மாலை நேரத்தில் 6 மணிக்கு பிறகு விளக்கேற்றி வைக்கலாம். இதில், திருமணத்தடை, கல்வித்தடை நீங்க வேண்டுமானால், மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் தீபம் ஏற்றி வருவதால், மேற்கண்ட தடைகள் நீங்கும்.
பூஜைகள் செய்யும்போது, தெற்கு முகமாக தீபமேற்றக்கூடாது என்பார்கள்.. அப்படி தெற்கு முகமாக தீபமேற்றினால், மனதில் சஞ்சல எண்ணங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்குமாம்.
வடக்கு தெற்கு முகங்கள்
எனவே, பூஜையறையில் தீபம் ஏற்றும்போது, வடக்கு முகமாக தீபம் எரிவது போல் ஏற்றினால் இல்லத்தில் சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்பார்கள்.. வீட்டிலுள்ள குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காரியத்தடைகள் என்பதே இல்லாத நிலை ஏற்படுமாம்.
வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றுவது எப்படி தெரியுமா? வாழைத்தண்டிலிருந்து நாரை பிரித்து எடுத்து, அதனை பஞ்சு போல திரித்து திரியாக மாற்றினால் வாழைத்தண்டு திரி கிடைக்கும்.
வாழை மரம் அல்லது வாழைத்தண்டு இருந்தால், அதிலிருந்து நாரை பிரித்தெடுத்துக் கொண்டு, அந்த நாரை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு காய வைத்த நாரை, அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
வாழைத்தண்டு திரி தீபம்
இப்படி வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.. குறிப்பாக, பூர்வ ஜென்ம பாவங்கள், தெய்வ குற்றங்கள் ஏற்பட்டு, அந்த பாவத்திலிருந்து விடுபட தாமரைத்தண்டு திரியில் தீபம் ஏற்றலாம்.. இதனால் செய்வினை கோளாறுகளும் நீங்கும்..
குலதெய்வம் கோபம் நீங்க பரிகாரம்
குலதெய்வம் தெரிந்தவர்கள் வருடா வருடம், தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்..
ஆனால், இப்படி ஆண்டுதோறும் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், குலதெய்வத்தை மறந்தவர்கள் குலதெய்வ சாபத்திற்கு ஆளாக நேரிடும்.. இப்படிப்பட்ட குலதெய்வ குற்றங்களையும், குலதெய்வம் கொண்டுள்ள கோபத்தை நீக்கவும், வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றி பரிகாரம் செய்வது சிறந்த தீர்வாகும். இதனால் குலதெய்வ அருளுடன், மகாலட்சுமியின் அருளும் சேர்த்து பெற முடியும்..
வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றிவரும்போது, வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும், சாந்தியும் நிரந்தரமாக கிடைக்கும்.. சிவ மந்திரத்தை உச்சரித்து இந்த தீபத்தை ஏற்றும்போது, சிவனின் அருள் கிடைக்கும்.. நிலம் சம்பந்தப்பட்ட சொத்து விவகாரங்கள் இருந்தாலோ, திருமணம் தடைபட்டாலும், வாழைத்தண்டு திரியை நல்லெண்ணெய் அல்லது பசு நெய்யில் ஏற்றி விளக்கேற்றலாம்.
அகல் விளக்கு - பித்ருதோஷம்
இந்த வாழைத்தண்டு திரியை குறிப்பிட்ட தெய்வத்திற்கு போட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் சாதாரணமாக விளக்கேற்றும்போது, அகல் தீபம் ஒன்றை வைத்து வாழை தண்டு திரியால் தீபம் ஏற்றிவந்தாலே பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்..
எனவே குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தால் சாபத்திலிருந்து விடுபடலாம்.












Click it and Unblock the Notifications