For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதன்கிழமையில் இப்படி செய்து பாருங்கள்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்! செல்வம் செழிக்கும்!!

புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடல்நலக் கோளாறுகள், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

Google Oneindia Tamil News

சென்னை: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். பெருமை மிக்க புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிமையான சில பரிகாரங்களைச் செய்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறக்கவும் புதன்கிழமை பரிகாரம் செய்வது ஏற்றது.

புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புதன் பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிவது புதன் தோஷத்தை போக்கும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

புதன் ஹோரையில் விளக்கேற்றுங்கள்

புதன் ஹோரையில் விளக்கேற்றுங்கள்

புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் வளர்ச்சியடையலாம் பொருளாதாரத்தில் வளம் பெறலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

 விநாயகர் வழிபாடு

விநாயகர் வழிபாடு

புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபட சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. விநாயகர் இந்த நாளில் அவதரித்தார் என புராணங்கள் கூறுகின்றன. பார்வதி தேவி தன் கைகளால் கணேசபெருமானை உருவாக்கிய நாள் புதன்கிழமை என்றும் ஒரு கதை உண்டு. இந்தக் கோணத்திலும் புதன் கிழமை அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு.

 அருகம்புல் மாலை

அருகம்புல் மாலை

தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட, புதன் கிழமையன்று கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றவும். புதன் மட்டுமல்ல, தினமும் இப்படி செய்து வந்தால், விரைவில் பிரச்சனைகள் நீங்கும்.
நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வேலையிலும் வெற்றி பெற விரும்பினால், புதன்கிழமை, விதிமுறைப்படி விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

பசுவிற்கு பச்சைப்பயறு

பசுவிற்கு பச்சைப்பயறு

காலையில் பசுவுக்கு பசும் புல் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதன் தோஷத்தின் அசுப பலன்கள் விலகும். அதே நேரத்தில், மன நிம்மதியும் உற்சாகமும் கிடைக்கும். ஒன்றரை கிலோகிராம் பச்சை பயிறை ஊறவைத்து நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக கொடுக்கவும். இதனால் உங்கள் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

 பச்சைப்பயறு தானம்

பச்சைப்பயறு தானம்

பொருளாதார முன்னேற்றத்திற்கு புதன் மிகவும் அனுகூலமான சிறப்பான நாள். பொருளாதார முன்னேற்றம் பெற, புதன்கிழமையன்று பிராமணருக்கு பச்சை பயிறு தானம் செய்யுங்கள். நல்ல ஆரோக்கியத்திற்காக, புதன் கிழமையன்று திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். தானமாக வழங்கும் துணியின் நிறம் பச்சையாக இருக்க வேண்டும். இது தவிர, முளை கட்டிய பச்சை பயிறையும் தானம் செய்ய வேண்டும். ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

புதன்பகவான் திருத்தலம்

புதன்பகவான் திருத்தலம்

திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். தன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் புதன் பகவானுக்கு உரிய தலமாகும். மீனாட்சி அம்மனை புதன்கிழமைகளில் வழிபட மாணவர்களின் கல்வி வளம் பெருகும். பொருளதார வளம் சிறக்கும்.

English summary
Financial crisis Wednesday parikaram: (செல்வ வளம் தரும் புதன்கிழமை பரிகாரம்) Doing some simple remedies will eliminate health ailments and lead to economic improvement.To overcome a financial crisis, feed the cow green grass every Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X