மச்ச சாஸ்திரம்.. உள்ளங்கையில் மச்சம் இருக்கா? உதட்டில் மச்சம் இருக்கா? வியப்பூட்டும் பலன்களை பாருங்க
சென்னை: மச்சம் எதனால் தோன்றுகிறது தெரியுமா? உடலில் தோன்றும் மச்சத்தை வைத்து அறிவியல் என்ன சொல்கிறது? சாஸ்திரம் என்ன சொல்கிறது?
நம்முடைய உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது, ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்துவிடுகிறது.. அப்போது ஒருவிதமான அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகின்றன..

ஆரோக்கியம்: பிறந்த சில குழந்தைகளுக்கு கால், அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருந்தாலும், குழந்தைகள் வளரும்போதே, அவைகள் மறைந்துவிடும். அதனால்தான், ஆரோக்கியத்தை வைத்து பார்க்கும்போது, இந்த மச்சங்களினால் பாதிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதில்லை..
ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ, அது உடனடியாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் டாக்டர்கள்..
காரணம், ஒன்றிரண்டு மச்சத்துக்கு மேல் அதிகமாக இருந்தால், அது மரபணு கோளாறாக இருக்கலாம்.. ஏகப்பட்ட மச்சங்கள் இருந்தால், அது புற்றுநோயாகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளதாம்.. மச்சங்கள் சாதாரண இயல்பு நிலையிலேயே இருந்தால் பரவாயில்லை, அதே மச்சம், நாளுக்கு நாள் பெரிதாக கொண்டே போனால், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
மச்சங்கள்: ஆபத்தில்லாத மச்சங்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா? கரடுமுரடான முனைகள் இல்லாமலும், வழுவழுப்பாகவும் குவிந்த வடிவிலும் மச்சங்கள் இருந்தாலோ அல்லது 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ அல்லது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் மாறாமல் அப்படியே இருந்தாலோ, அவை ஆபத்தில்லாத மச்சங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
எப்போதும் இல்லாமல் திடீரென சருமத்தில் மச்சம் போல தோன்றினாலோ அல்லது மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தாலோ அதை அலட்சியப்படுத்தக்கூடாது.
சாஸ்திரங்கள்: அதேபோல, மச்சத்தை வைத்தே, ஒருவரின் குணாதிசயங்களை கச்சிதமாக கணித்து சொல்லியிருக்கின்றன சாஸ்திரங்கள்.. சாமுத்திரிக்கா லட்சண சாஸ்திரத்தில், உடலில் தோன்றும் மச்சம் குறித்து பல்வேறு குறிப்புகள் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன..
உடலிலுள்ள மச்சத்தின் இருப்பை வைத்தே, அவர்களது அதிர்ஷ்டமும் கணக்கிடப்படுகிறது.. இது ஜோதிட சாஸ்திரத்திலும் உள்ளது. அதன்படி, நெற்றி மற்றும் உதடுகளில் மச்சம் இருந்தால், அதற்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம். இது ஆண் - பெண் இருவருக்குமே பொருந்தும்.
செழிப்பின் அடையாளம்: நெற்றியில் மச்சம் இருந்தால், மிகவும் அதிர்ஷ்டமாம்.. அது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆசைப்பட்ட வாழ்க்கை அமையுமாம்... அன்பான வாழ்க்கை துணை கிடைக்குமாம்.. அந்தவகையில், ஆண்களுக்கு நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், செல்வமும், வளமான வாழ்வும் வந்துசேரும். நெற்றியின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவது கஷ்டம்..
பெண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால், துணிச்சலாக இருப்பார்களாம்.. யாருக்குமே பயப்படாமல், பணிந்தும்போகாமல், கெத்தாக இருப்பார்களாம். பெண்களின் நெற்றியில் இடதுபுறம் மச்சம் இருந்தால், அவர்களுக்கு சுருக்சுருக்கென கோபம் வந்துவிடுமாம்.. ரொம்ப அல்ப குணம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
கண்கள்: ஆண்களுக்கு வலது கண்ணில் மச்சமிருந்தால், நண்பர்களால் நிறைய பலன் கிடைக்கும்.. ஆனால், பெண்களுக்கு எந்த கண்ணில் மச்சம் இருந்தாலும் அவர்களுக்கு ஏகப்பட்ட கஷ்டம் வாழ்க்கையில் வருமாம்.
உதடுகளுக்கு அருகில் மச்சம் இருந்தால், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நபராக கருதப்படுகிறீர்கள்.. அதாவது, உதட்டின் வலது பக்கம் மச்சமிருந்தால், அவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.. இடதுப்பக்கத்தில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு காதல் ஆசை அதிகம் இருக்குமாம்.. நிறைய காதல்கள் ஏற்படவும் சான்ஸ் கிடைக்குமாம்... அதேசமயம், ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுமாம்.
உதடு மச்சம்: கட்டை விரலில் மச்சம் இருந்தால், நிஜமாகவே நீங்கள் அதிர்ஷ்டசாலியாம்.. அதிபுத்திசாலியும்கூட.. அழகாகவும், ஸ்டைலாகவும் இருப்பார்களாம்... இடது கன்னத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியமும், கனவுகளும் கனவுகள் இருக்கும். இதற்காகவே, சாதிக்க ஆசைப்படுவார்களாம்.. புதுபுது விஷயங்களை தேடி செல்லும் அறிவாளிகளாகவும் இருப்பார்களாம்.
மேல் உதட்டின் வலது அல்லது இடது மூலையில் மச்சம் இருந்தால், நீங்கள் ஒரு உணவுப் பழக்கம் உடையவர் இப்படியெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளங்கை: அதேபோல, உள்ளங்கையில் மச்சம் இருந்தால் விருப்பம் போல் வாழ்க்கை அமையுமாம்.. இடது காதில் மச்சம் இருந்தால் பெண்களுக்கு அதீத பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.. ஆனால், பெண்களை பொறுத்தவரை, முகவாயில் மச்சம் இருப்பதுதான் மிக மிக நல்ல அம்சமாக கருதப்படுகிறதாம்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications