தாலி கயிறு மாற்ற உகந்த நாள்.. மஞ்சள் தாலியின் மகிமை.. தாலி கயிற்றை மாற்றும்போது செய்யக்கூடாத விஷயம்
சென்னை: தாலியை தங்கத்திலேயே அணிந்தாலும், தாயி கயிறுக்கான மகத்துவம் என்றுமே குறைவதில்லை.. மஞ்சள் கயிறு கழுத்தில் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? தாலி கயிறு மாற்றுவதாக இருந்தால் பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும்? தாலி சரடு எந்தெந்த கிழமைகளில் மாற்ற வேண்டும்? தாலி கயிறு மாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் முன்னோர்கள் தெளிவாக சொல்லி வைத்துள்ளார். அதை சுருக்கமாக பார்ப்போம்.
தாலிக்கயிற்றில் மஞ்சள் சேர்த்துதான் மணமகளுக்கு கட்டப்படும். இந்த மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புளுக்கு சற்று மேலே இருக்க வேண்டும். திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு இந்த மஞ்சள் கழட்ட மாட்டார்கள்.. காரணம், இந்த மஞ்சள்தான், தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாகும்.

மஞ்சள் கயிறு நன்மைகள்
அத்துடன், பெண்களின் மார்பகத்தில் தொற்றுக்கள் சேராமல் ஆண்டிபயாடிக் மஞ்சள் தடுக்க செல்கின்றன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் அண்டுவதில்லை. எனவேதான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும்கூட, மஞ்சள் கயிற்றில்தான் கட்ட வேண்டும் என்கிறார்கள்.
வருடம் 2 முறையாவது தாலி கயிற்றினை மாற்றி கொள்ளலாம். கயிறு மங்கலாகிவிட்டால், அதனை மாற்றி கொள்ளலாம். அந்தவகையில், ஆடி18, காரடையான் நோன்பு, தீபாவளி நோன்பு போன்ற நேரத்தில் தாலிக்கயிறு மாற்றலாம். அல்லது சுப நட்சத்திர, சுபயோக நாட்களில் மாற்றிக்கொள்ளலாம். மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் அனைத்தும் கூடி வரும் நாளில் தாலி கயிற்றினை மாற்ற வேண்டுமாம்.
தாலி கயிறு மாற்ற உகந்த நாட்கள்
அதாவது சித்திரை மாதத்தில் வரும் மீனாட்சி திருக்கல்யாணம் அன்று தாலியை மாற்றினால் மிகவும் நல்லது.. ஆடி மாதம் என்றால், ஆடிப்பெருக்கு தினத்தில் தாலி மாற்றலாம்.. ஆவணி மாதத்தில், வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி, மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.
ஐப்பசி மாதமாக இருந்தால், முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.. கார்த்திகை மாதம் என்றால், வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்.
கர்ப்பிணிகள் தாலி கயிறு மாற்றலாமா
மாசி மாதத்தில், முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி, மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த யோகம் போன்ற நாட்களில் தாலியை மாற்றலாம்
அதேபோல, கர்ப்பமாக இருக்கும்போது தாலி கயிற்றை மாற்றக்கூடாது... பிரசவம் முடிந்துதான் கயிறு மாற்ற வேண்டும். செவ்வாய், சனிக்கிழமை, திதி, அஷ்டமி, நவமி, பிரதமை முதலிய தினங்களில் மாற்றிக் கொள்ள கூடாது.. செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே தாலி கயிற்றை மாற்ற வேண்டும். அதேபோல, முற்பகல் நேரத்தில் மாற்றிக் கொள்வது நல்லது..
பெரியவர்கள் ஆசீர்வாதம்
எப்போது கிழக்கு திசையில் அமர்ந்து தாலி கயிறு மாற்ற வேண்டும். அதற்கு முன்பு, தெய்வத்தின் பாதத்தில் வைத்து பெரியோர்களிடம் எடுத்துக் கொடுத்து மாற்றிக் கொள்வதும், பிறகு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும் நன்மைகளை பெற்றுத்தரும்.
சிலருக்கு பௌர்ணமி அன்று தாலிக் கயிறு மாற்றலாமா? என்ற சந்தேகம் உண்டு.. பௌர்ணமியில் தாலி மாற்றுவது பற்றி எந்த விதமான கட்டாய கட்டுப்பாடுகளும் இல்லை. தாலி கயிறை மாற்றுவதற்கு ஏற்ற நாள் மற்றும் கிழமை என சில நம்பிக்கைகள் இருந்தாலும், பௌர்ணமி தினத்தன்று மாற்றுவது தவறில்லை என்கிறார்கள்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications