உல்லாச பங்களா 10 கோடி.. கெனிஷாவுடன் டூயட் பாடும் ரவி மோகன்.. ஊரில் விரட்டியடித்த பெண்ணுடன்: பிரபலம்
சென்னை: ஜெயம் ரவி திருந்திவிடுவார் என்ற நம்பிக்கை அந்த பிள்ளைகளுக்கு உள்ளது.. அந்த நம்பிக்கை வீண் போகாமல் ஜெயம் ரவி நடந்துகொண்டால் ரசிகர்கள் அவரை அங்கீகரிப்பார்கள். இல்லாவிட்டால் ரசிகர்கள் புறக்கணிப்பார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். அத்துடன், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருக்கும் சப்போர்ட் செய்து பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், "ஜெயம் ரவி என்றாலே, ஆர்த்தியுடன் அவரது 2 குழந்தைகளுடன்தான், நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறார்.. ஆனால், இப்போது ஜெயம் ரவியை வெறுக்கிறார்கள்.. ஆர்த்தியுடன் வாழும்போதே, கெனிஷாவுடன் கோவாவில் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது ரசிகர்கள் வரை தெரிந்துவிட்டது.

சோஷியல் மீடியாவில் எதிர்ப்பை அனைவரும் பதிவு செய்து வருகிறார்கள்.. உடனே ஜெயம் ரவியை மாற்றி ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். பெயரை மாற்ற வேண்டிய அவசியமேயில்லையே? மருமகனை வைத்து 3 படங்கள் எடுத்தார்கள் ஆர்த்தி வீட்டினர்.. படம் எடுத்து 100 கோடி நஷ்டமும் ஆனார்கள்.. மறுபடியும் தன்னை வைத்தே தொடர்ந்து படம் எடுக்குமாறு ஜெயம் ரவி அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்..
தனுஷ் - ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா - தனுஷ் பிரிவுக்கு காரணமே இதுதான்.. சுஜாதா விஜயகுமார் என்ன நினைக்கிறாரோ, அதைத்தான் அன்று லதா ரஜினிகாந்த்தும் நினைத்தார்.. தனுஷை பொறுத்தவரை தனக்கு புது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டேயிருக்க வேண்டும், பணத்தை பற்றியோ, கடனை பற்றியோ, படம் ஓடுதோ இல்லையோ அதைப்பற்றியோ கவலையில்லை.. கடன்காரர்கள் எல்லாம் ரஜினி வீட்டுக்கு போனார்கள்.. இப்படியொரு நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதையே சுஜாதா விஜயகுமார் நினைக்கிறார்.
பெரிய இடத்து பிள்ளை
ஜெயம் ரவி குடும்பம் அவரைவிட்டு முழுமையாக விலகிவிட்டதால், தன்னுடைய குடும்பத்து பிள்ளையாகவே, மருமகனை மகனாகவே பாவித்தார் சுஜாதா.. மாஸ் ஹீரோ என்ற இமேஜை ஜெயம் ரவிக்கு பில்டப் செய்ததே சுஜாதா விஜயகுமார்தான். ஆனால், இதற்கு மேல் அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
கல்பனா ஹவுஸ் என்பது சாந்தோமில் புகழ்பெற்ற குடும்பம்.. ஆனால், அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்த ஜெயம் ரவி, நல்ல மருமகனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருந்திருக்கலாம். ஆனால், நல்லவனை போல நடித்துவிட்டார்.. கெனிஷாவுடன் டூயட் பாடி கொண்டிருப்பதை ஊரே பார்க்குது.. அவரது பிள்ளைகளின் மனநிலை எப்படி இருக்கும்? அப்பாவை எப்படி ரோல்மாடலாக எடுத்து கொள்வார்கள்?
குடும்ப மானம் போகாதா
ஜெயம் ரவியின் பெற்றோருக்கும் கவலை வந்துவிட்டது.. மகனை நினைத்து குற்ற உணர்ச்சியில் உள்ளார்கள்.. எடிட்டர் மோகனுக்கு ஒரு நல்ல மரியாதை சினிமா துறையில் உள்ளது.. ஒரு டான்சரோடு சுற்றி கொண்டிருந்தால் குடும்ப மானம் போகாதா? கோவாவில் 10 கோடி ரூபாய்க்கு கெனிஷாவுக்கு வீடு வாங்கி தந்திருக்கிறார்.. 1 கோடி ரூபாய்க்கு கெனிஷாவுக்கு ஆல்பம் போட்டு தந்திருக்கிறார்.. இதுக்கெல்லாம் காசு ஆர்த்தி குடும்பத்தினருடையதுதான்.
ஜெயம் ரவிக்காக ஈசிஆரில், சுஜாதா விஜயகுமார் தரப்பில் வீடு வாங்கி தந்திருக்கிறார்கள்.. ஜெயம் ரவி - ஆர்த்தி பெயரில் சொத்துக்களை வாங்கி தந்திருக்கிறார்கள். அதில் சென்னை தேனாம்பேட்டையில் ஆர்த்தி - ரவி பெயரில் உள்ள ஆபீஸுக்கு
கெனிஷாவை அழைத்து கொண்டுபோய் உட்கார வைத்துள்ளார்.. கெனிஷாவுக்கு அங்கு என்ன வேலை?
பேயிங் - கெஸ்ட்
கெனிஷா பெங்களூரில் ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் பேயிங்-கெஸ்ட்டாக குடியிருந்துள்ளார்.. அந்த வீட்டு ஓனருக்கும், கெனிஷாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு, அந்த ஓனர் குடும்பத்தில் தகராறு வெடித்திருக்கிறது.. உடனே அந்த வீட்டு பெண், 20 பேருடன் வந்து கெனிஷாவை அங்கிருந்து அடித்து விரட்டியடித்திருக்கிறார்கள். இப்படி பல சம்பவங்கள் உள்ளன..
இந்த நேரத்தில் ஜெயம் ரவி கோவாவில் சிக்கிவிட்டார். கெனிஷாவுடன் இப்படி பல இடங்களுக்கு செல்வதே, ஆர்த்தியையும், குழந்தைகளையும் வெறுப்பேற்றுவதற்காகத்தான்.. அம்மா ஸ்தானத்தில் வேறு பெண்ணை, அந்த குழந்தைகளுக்கு பார்க்க முடியுமா? ஜெயம் ரவி திருந்திவிடுவார் என்ற நம்பிக்கை அந்த பிள்ளைகளுக்கு உள்ளது.. அந்த நம்பிக்கை வீண் போகாமல் ஜெயம் ரவி நடந்துகொண்டால் ரசிகர்கள் அவரை அங்கீகரிப்பார்கள். இல்லாவிட்டால் ரசிகர்கள் புறக்கணிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications