ஓட்டு பெறுவதற்காகவே அடியெடுத்து வைக்கிறாரா அபிஷேக்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: தான் என்ன செய்தாலும் உலகம் நம்மை பார்க்க வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறார் என அபிஷேகம் மீது தொடர்ந்து குற்றசாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
கேமரா எந்தப் பக்கம் இருக்கிறதோ அதில் தவறாமல் அபிஷேக்கின் சேட்டைகள் பதிவாகி விடுகிறது.
இவர் மீது இருக்கும் நெகட்டிவ் சிந்தனைகளை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

ஐந்தாவது சீசன் தொடக்கம்
சக போட்டியாளர்களை கலாய்ப்பதாக இருந்தாலும் சரி, மோட்டிவேஷனல் செய்வதாக இருப்பதாக இருந்தாலும் சரி அனைவரின் மனதிலும் என்ன மாதிரி சிந்தனை இருக்கும் என்பதில் தெரிந்து கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அபிஷேக். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீசன் களை வெற்றி பெற்றதை தொடர்ந்து தான் தற்போது 5 வது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதில் ஒவ்வொரு சீசனிலும் உன்னிப்பாக கவனித்த போட்டியாளர்கள் தற்போது நன்றாகவே விளையாட்டை விளையாடி வருகிறார்கள். அதில் ஒருவர்தான் அபிஷேக்கும் இவர் ஏற்கனவே ஒரு யூடியூப்பர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி ரிவ்யூ செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி
இதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கழுவி ஊற்றிக் கொண்டிருந்த இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்திருப்பது இவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் என்ன இப்படி செய்து விட்டார் என பலர் கூறி வரும் நிலையில், தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கு எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே தவறாமல் நிரூபித்து விட வேண்டும் என்று இவர் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு கூறப்பட்டு வருகிறது.
Recommended Video

இதுதான் பிளஸ் பாயிண்ட்
ஐந்தாவது சீசனில் ஒன்பது நாட்கள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இவர் இல்லாத ப்ரோமோவே இல்லை என்று சொல்லும் அளவில் தினமும் ப்ரோமோகளில் இடம் பெற்று விடுகிறார். அதுமட்டுமல்லாமல் எந்த மாதிரி போட்டியாளர்களுடன் பேசினால் போட்டியாளர்களும், ரசிகர்களும் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது இவருடைய பிளஸ் பாயிண்டாக இருந்துவருகிறது. ஆனால் ஏற்கனவே இவர் மீது நெட்டிசன்கள் கடுப்பாக இருக்கும் நிலையில் இப்போது தங்களுடைய வெறுப்பை காட்டி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

எதார்த்தமான பேச்சு
இந்தநிலையில் இவருடைய பெயரும் முதல் வார நாட்களில் எலிமினேஷனில் இருப்பதால் இவருக்கு கொஞ்சம் பயம் இருக்கிறது போல, அதனால்தான் வார்த்தைக்கு வார்த்தை சக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஓட்டு பற்றி கூறிக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இவர் தாமரை செல்வியை கலாய்க்கும் போது இரண்டு லட்சம் ஓட்டு அவுட் என்று அண்ணாச்சி கூறியிருப்பதும், தற்போது இவரும் எதார்த்தமாக ஓட்டு பெறுவதற்காகவே இப்படி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் இந்த வாரம் இவருக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கிறது என்று என அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications