குழப்பத்தை ஏற்படுத்தும் அபிஷேக்...குறுகுறுவென பார்க்கும் அண்ணாச்சி..இன்னைக்கு கச்சேரி இருக்கு
சென்னை: இத்தனை நாளா நல்லவங்க வேஷம் போட்டுட்டு இருந்தாங்க இப்போ தன்னுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
புறம் பேசுவதை மையமாக கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்பதான் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்து இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதிலும் வந்த வேலையை ஆரம்பித்துவிட்டார் அபிஷேக் என்று அவருடைய நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

நிகழ்ச்சி களைக்கட்டிருச்சி
இத்தனை நாளா கலகலப்பாகவும் ஜாலியாகவும் போய்க்கொண்டிருந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது நிகழ்ச்சி களைகட்ட தொடங்கி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர். அதுவும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றியிருப்பது அபிஷேக் தான் என்று அவருடைய புராணத்தை தான் பாடி வருகின்றனர். முகத்துக்கு நேராக ஒன்று பேசுவதும், அந்தப் பக்கம் திரும்பி வேறொன்றாக பேசுவதுமாக எல்லா சீசனிலும் பார்த்து பழகி வந்த ரசிகர்கள் இந்த சீசனில் அப்படி ஒன்றும் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்பதை தற்போது அபிஷேக் நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ்
தங்களுக்குப் பிடிக்காதவர்களை பற்றி கூட்டமாக சேர்ந்து பேச ஆரம்பித்திருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் இனி என்னவெல்லாம் கலவரம் நடக்கப்பகிறதோ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பலருக்கும் பிடிப்பதற்கு காரணமே அதில் நடக்கும் கலவரங்களும் தான். இந்த நிகழ்ச்சியில் ஒருவருடைய கேரக்டரை நன்றாக புரிந்து கொள்ளும்படி ஆகிவிடுகிறது. பொதுவாக ஒரே வீட்டுக்குள் 100 நாட்கள் இருக்கும்போது அவருடைய சுயநலம், குணநலம் அனைத்துமே பார்ப்பவர்கள் நன்றாக புரிந்து விடுகின்றனர். இதில் எத்தனை நாட்கள் வேஷம் போட்டாலும் சீக்கிரத்தில் வேஷம் கலைந்து விடும்.
Recommended Video

ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்
நிகழ்ச்சியில் யாரு பிரச்சனையை தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த படியே தற்போது அபிஷேக் பிரச்சனையை தொடங்கிவிட்டார். இவர் நேற்றைய எபிசோட்டில் ராஜு டிராமாவுக்கான ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றாலும் பிரியங்கா கேட்கும்போது அதை பற்றி பெரிய அளவில் கவலைப்படுவது இல்லை என்பது போலத்தான் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அண்ணாச்சியை பற்றி இவர் பேசுவது இவருடைய குணத்தை காட்டி விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிரச்சனை கிளம்பிடுச்சி
இந்த வீட்டிற்குள் யாரு அதிகமாக வேலை செய்கிறார்கள், யாரு அதிகமாக காணவில்லை என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அபிப்பிராயத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாச்சியின் கேரக்டர் செட் ஆகவில்லை, எல்லாரிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதனை அவருக்கு தெரியாமல் அண்ணாச்சி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இன்னைக்கு கச்சேரி களைகட்ட போகிறது என்று ஆர்வத்துடன் கூறிவருகின்றனர்.ஆனால் இந்த பிரச்சனையை கிளப்பப் போகிறது நெட்டிசன்களின் நாயகன் அபிஷேக் அதனால் என்ன மாதிரி முடிவு வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications