"உதவி செய்யாட்டியும், செய்வதாக வடிவேல் சொன்னதே பரவாயில்லை” போண்டா மணி... ரசிகர்களின் ஆறுதல்கள்
சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் போண்டா மணியின் மருத்துவச் செலவை அரசே ஏற்றிருக்கும் இந்த சூழ்நிலையில்,பல்வேறு பிரபலங்களிடமிருந்து அவருக்கு உதவிகள் வந்து கொண்டிருக்கிறது.
அப்படி இருக்க காமெடி நடிகர் வடிவேலு சொன்னது போல் தனக்கு எதுவும் உதவி இதுவரை வரவில்லை என்றும் ஆனால் அவர் உதவி செய்வேன் என்று கூறியதை கேட்டதுமே தாம் பாதி குணமடைந்து விட்டதாகவும் நெகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் கூறியுள்ளார் போண்டாமணி.\

துணை நடிகராக 300 படங்களுக்கு மேல்
வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து பல படங்களில் தன்னுடைய காமெடியால் மக்களை ரசிக்க வைத்தவர் நடிகர் போண்டாமணி.துணை நடிகராக வந்தாலும் தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பாலும், வசனங்களாலும் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். ஏறக்குறைய 30 வருடத்திற்கு மேலாக சினிமாவில் இருக்கிறார். இயக்குனர் கே.பாக்யராஜால் பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அன்றைய காமெடி நடிகர்கள் கவுண்டமணி போன்றவர்களுடன் துவங்கி தற்போது இருக்கும் காமெடி நடிகர்கள் வரை இணைந்து துணை நடிகராக 300 படங்கள் வரை நடித்துள்ளார்.

படப்பிடிப்பால் ஏற்பட்ட விளைவு
"எவ்வளவு அடிச்சி கேட்டாலும் சொல்லாத" "சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்றும்"போன்ற வசனங்கள் இவரின் காமெடி நடிப்பில் உருவானவைகள் ஆகும். சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போண்டாமணி தற்பொழுது தான் கொஞ்சம் உடல்நிலை சீராகி வழக்கம் போல் படப்பிடிப்பிற்கு செல்ல துவங்கினார். படப்பிடிப்பின் போது படக் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக போண்டாமணியை சாக்கடையில் விழுந்து நடிக்க வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு அவரது இரண்டு சிறுநீரகங்களையும் செயல் இழக்க வைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

உதவும் பிரபலங்கள்
திடீரென்று மற்றொரு காமெடி நடிகர் பெஞ்சமின் சமூக வலைதளங்களில் போண்டா மணியின் உடல்நிலை குறித்தும் உதவிகள் வேண்டியும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார். வீடியோவை பார்த்ததும் முதல் ஆளாக விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற நடிகர்கள் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுத்து போண்டாமணிக்கு உதவியுள்ளனர். பல இடங்களில் இருந்தும் பல நல் உள்ளங்கள் போண்டாமணிக்கு உதவி செய்து வருகின்றனர்.மருத்துவமனையில் அவரை நேரில் சென்று சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவ செலவை அரசை ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.

வைகை புயலின் வாக்கு
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்த பிரபல காமெடி நடிகர் வடிவேலுவிடம் போண்ட மணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தன்னால் இயன்ற உதவியை போண்டா மணிக்கு செய்வதாக வடிவேலு கூறியிருந்தார். ஆனால் தற்போது வரை வடிவேலு பெயரில் தனக்கு எதுவும் உதவிகள் வரவில்லை என்றும் ஆனால் அவர் உதவி செய்வதாக கூறியதுமே தன்னுடைய உடல்நிலை பாதி குணமடைந்து விட்டதாக நெகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் போண்டாமணி கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வடிவேலு குறித்து பிரபல நடிகர் சிங்கமுத்து கூறுகையில் அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்று கூறியிருந்தார். போண்டாமணி விஷயத்திலும் அப்படித்தான் இருக்குமா!? அல்லது வடிவேலு ஏதேனும் உதவி செய்வாரா!? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications