போன் நம்பர் தரவா..மனைவியை பொதுவெளியில் திட்டிய கருணாஸ்..காரணம் அந்த மாத்திரை?
சென்னை: நடிகர் கருணாஸ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மனைவி பற்றி பல ரகசியத்தை உடைத்திருக்கிறார்.
கருணாஸ் தன் மனைவி எங்கே போனாலும் சூட்கேஸ் நிறைய மாத்திரைகளை கொண்டு செல்வார் என்று கிண்டல் செய்திருக்கிறார்.
என் மனைவி கிட்ட யார் உடம்பு சரியில்லன்னு சொன்னாலும் உடனே அதுக்கு ஒரு மாத்திரை பெயரை சொல்லிருவாங்க என்று கலாய்த்து இருக்கிறார்.

காமெடி நடிகராக வாழ்க்கையை துவங்கிய கருணாஸுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையே இருக்காது. அவர் ஆரம்பத்தில் நந்தா திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். அதற்கு பிறகு காதல் அழிவதில்லை, பாபா, வில்லன், திருமலை,, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என பல திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி இருப்பார்.
அதிலும் கருணாஸின் அட்டகாசம் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை யாராலும் மறக்க முடியாது. அஜித்திடம் மாட்டிக் கொண்டு தனக்கு தெரிந்த உண்மையை வெளியே சொல்லி அஜித்தை மாட்டி விட வேண்டும் என்று இவர் போடும் பிளான் எல்லாம் இவருக்கே திரும்பி விடுவதும், அப்போது அவருடைய எக்ஸ்பிரஷனும் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாது.
அந்த மாதிரி காமெடி நடிகராக இருந்து வந்த கருணாஸ் பிறகு கதாநாயகனாகவும், ஒரு பாடகராகவும், அரசியல் பிரமுகராகவும் அடுத்தடுத்து வளர்ந்து கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில்தான் இவர் பாடகி கிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு கெண் என்ற மகனும் டயானா என்ற மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் தான் இவருடைய மகளுக்கு திருமணம் முடிவடைந்து இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கருணாஸ் பேசி இருக்கிறார். அப்போது இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குறோம். என் பொண்டாட்டி எல்லாம் ஒரு சூட்கேஸ் நிறைய மாத்திரை வச்சிருக்காங்க, நீங்க எல்லாரும் நினைச்சுக்குவீங்க அதுல நிறைய ஜுவல்ஸ், மேக்கப் ஐட்டங்கள் இருக்கும்னு ஆனால் அதெல்லாம் உண்மை இல்லைங்க ஃபுல்லா அங்க மாத்திரை தான் இருக்குது.

இப்ப வேணாலும் இந்த கூட்டத்தில் நான் என் பொண்டாட்டி நம்பர தரேன் நீங்க என் மனைவிக்கு கால் பண்ணி, ஏதாவது உடம்புல பிரச்சனைன்னு சொல்லுங்க, உடனே மாத்திரை பெயரை சொல்லிடுவாங்க.இந்த மாத்திரையில் 100 mg, அந்த மாத்திரையில் 200 mg என்று அடிக்கக்கிட்டே போவாங்க. இத்தனைக்கும் என் மனைவி இன்னும் எம்பிபிஎஸ் எல்லாம் படிக்கலங்க. ஆனா எல்லா வியாதிக்கும் மருந்து சொல்லுவாங்க. ஏன்னா எல்லா வியாதிக்கும் மாத்திரை வாங்கி பழகிட்டாங்க .
அந்த மாதிரி மாத்திரையை போட்டு ஜலதோஷத்தால் மூக்கிலிருந்து தண்ணி வந்துகிட்டு இருந்தா கூட அதை நிப்பாட்டிருதாங்க. அதை எதுக்குங்க பண்ணனும் ரெண்டு நாள் தண்ணி வரும் பிறகு அதுவா நின்னுரும் .அதுக்கு மாத்திரையை போட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம் என்று சொன்னா, மூக்கு வடிந்துகிட்டு இருந்தா ஒரு மாதிரி இருக்கு அனீசியா இருக்கு டீசண்டாக இருக்காது என்று பல காரணம் சொல்றாங்க.
மாடர்ன் ஸ்டைல் என்று சொல்லிக்கொண்டு நாம செய்ற செயலால்தான் நம்முடைய உடம்புக்கு கெட்டுப் போகுது என்று இவர் ஆக்ரோஷமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அப்போது ரசிகர்கள் அப்போ நடிகர் கருணாஸ் மனைவிக்கு அத்தனை பிரச்சனை இருக்கிறதா? அதனால் தான் அவருக்கு பல மாத்திரைகள் பெயர் தெரிந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications