Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிங்காங் மகள் திருமணத்திற்கு வடிவேலு செய்த மொய் இவ்வளவு! ஆனால், மேடையில் நெகிழ வைத்த பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கிங்காங் மகள் திருமணம் கடந்த வாரம் சென்னையில் வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் பல நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்றாலும், திருமணம் முடிந்ததும் ஒரு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், கிங்காங் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு தன் மகளுக்கு அளித்த அன்பளிப்பு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். மேலும், நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்த செயல் குறித்து நெகிழ்ச்சியுடன் கிங்காங் பகிர்ந்துள்ளார்.

குறைந்த உயரம் கொண்டிருந்தாலும், நடிகர் கிங்காங் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் தனது திறமையால் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அதிசய பிறவி திரைப்படத்தில் கிங்காங் ஆடிய பிரேக் டான்ஸை ரசிக்காதவர்களே கிடையாது. அந்த நேரத்தில் அது பலராலும் வியந்து பேசப்பட்டது. இப்போதும் காமெடி சேனல்களில் இந்த பாடல் மற்றும் நடனம் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

King Kong Vadivelu Premalatha Vijayakanth

அதுபோல, கிங்காங் அந்த நேரத்தில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். கடைசியாக அவருடன் போக்கிரி, சுறா, கந்தசாமி போன்ற படங்களில் இணைந்து செய்த கலாட்டா பலரையும் ரசிக்க வைத்தது. கிங்காங்கிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அவருடைய மூத்த மகள் கீர்த்தனாவிற்கு கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றாலும், திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார். திருமணத்திற்கு முன்பு சில மாதங்களாகவே கிங்காங் பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. முதல்வர் தொடங்கி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்திருந்தார்.

நடிகர் விஜயை சந்திக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்ததாக கிங்காங் கூறியிருந்தார். அவர் பலருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தாலும், சில பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகர் விஷால், ரோபோ சங்கர், ராதாரவி போன்ற சினிமா பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டது அனைவரையும் வியக்க வைத்திருந்தது.

பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், அதிமுக ஜெயக்குமார் போன்ற அரசியல் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிங்காங் தனது மகள் திருமணம் குறித்து சினி சமூகம் YouTube சேனலுக்கு அளித்த பேட்டியில், "பிரேமலதா மேடம் என் மகள் திருமணத்திற்கு வந்தது எனக்கு ரொம்பவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம், நான் அழைப்பிதழ் கொடுக்கும்போது அவங்க, 'நான் அமெரிக்காவுக்கு போக வேண்டியது இருக்கு' என்று சொல்லியிருந்தாங்க. ஆனாலும், 'முடிந்தவரைக்கும் வர பார்க்கிறேன்' என்று சொன்னாங்க. சொன்னது போலவே என் மகள் கல்யாணத்துக்கு வந்துட்டாங்க. சாயங்காலம் தான் அவங்க வரப்போறாங்க என்ற விஷயம் எனக்கு தெரிந்தது. அது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. மேடையில் வந்து அவ்வளவு பெருமையாகவும் சந்தோஷமாகவும் பார்த்துட்டு இருந்தாங்க" என்று கூறினார்.

King Kong Vadivelu Premalatha Vijayakanth

மேலும், "சும்மா பாக்குறதுக்கும், மகிழ்ச்சியோடு பெருமையாகப் பார்க்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. என்னை பாராட்டி விட்டு அன்பளிப்பு தந்துட்டு போனாங்க. வடிவேல் அண்ணனால கல்யாணத்துக்கு வர முடியல. அந்த நேரத்தில் அவர் கோவில் ஃபங்க்ஷன் விஷயமா வேலையில் இருந்தாரு. அதனால்தான் அவர் வரல. அதற்கு பிறகுதான் அவர் ஒரு வீடியோ வெளியிட்டார்" என்றார். அந்த வீடியோவில், "அவங்க வரல, இவங்க வரலன்னு வருத்தப்படாத முதல்வரே வந்துட்டாருன்னு சொல்லியிருந்தாரு. என்னுடைய மகனுக்காக வடிவேலு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு செய்திருந்தார்" என்று கிங்காங் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+