24 மணி நேரமும் சாமியா? ஆட்சிக்கு அதுக்கா வந்தீங்க மோடி? ஏன் இதையெல்லாம் செய்யல? கொதித்த பொன்வண்ணன்
சென்னை: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்வண்ணன், பாரதிய ஜனதா ஆட்சியை விமர்சித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதில் நீங்கள் 24 மணி நேரமும் சாமியை பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருப்பீர்களா? சமுதாயத்தில் இளைஞர்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நடிகராகவும், இயக்குனராகவும் பலருக்கும் பரிச்சயமான பொன்வண்ணன் சமீபத்தில் திமுக நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது மோடி பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பொன்வண்ணன் பேசுகையில், இந்த நாட்டில் நான் கஷ்டப்படுகிறேன் அதுபோல இந்த நாட்டில் பலர் படிச்சு வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க. அதை பத்தி பேசுறதுக்கு ஒருத்தரும் இல்லையா? எப்போம் பாரு சாமி கும்பிடு, சாமி இருக்குன்னு... சொல்லிக்கிட்டே இருக்கீங்களே? அந்த சாமி இருக்குது... இல்ல... அதை பத்தி எனக்கு என்ன கவலை? அந்த சாமிக்கு அந்த அதை காப்பாத்திக்க தெரியாதா? நீங்க ஏன் அதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
இந்த பூமில்ல எத்தனை கோயில் இருக்கிறது...? இதற்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா என்னுடைய வீட்டில் என்னுடைய பெயர் சண்முகம். இந்த பெயரை எங்க வீட்டில பழனியில் போய் மொட்டை போட்டு எனக்கு வச்சாங்க. என் தம்பி பேரு ரங்கநாதன், என் சின்னதம்பி பேரு சின்னசாமி, எங்க அம்மா பேரு பாவாத்தா. அது ஒரு அம்மனின் பெயர். அப்பா பெயர் பொன்னுச்சாமி சிவனுடைய பெயர். இப்படி எங்கள் வீட்டில் ஐந்து பேர் பெயரும் சாமி பெயர்.
அதுபோல எங்க அப்பா தூங்கும் போதும் சரி, தூங்கி முழிக்கும்போதும் சரி ஐயா காப்பாத்துங்க அய்யனாரே, பெருமாளே என்று எல்லா சாமியையும் கும்பிடுவர். எங்க அம்மா ஏதாவது காய்ச்சல் என்றால் அடுப்பு சாம்பலை எடுத்து நெத்தியில் வச்சு விடுறாங்க... அது மட்டும் அல்லாமல் காலையில் ககுளித்ததும் தலையை இழுத்து நெற்றியில் ஒரு பட்டையை போட்டு என் புள்ள நல்லபடியா பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வரணும்னு வேண்டுகிறாங்க.. அங்கேயும் சாமி தான் இருக்கு.
அதுபோல வீட்டில் இருக்கும் காலண்டரிலும் சாமி படம் தான் இருக்கு. அது மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் போட்டோவில் கிருஷ்ணர், அனுமான், சிவன் எல்லாம் சேர்ந்து ஒரு அஞ்சு போட்டோ இருக்கு அதுலயும் சாமிதான்.. அது போல கையில் கயிறு கட்டுவதிலும் சாமி இருக்கு. இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதனால நான் வெஜ் சாப்பிடக்கூடாது என்று சொல்லுறாங்க, அங்கேயும் சாமி...
இப்படி வீட்டுக்குள்ளே மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் அங்கு ஒரு மரத்தில் கயிறு கட்டி இருக்கும். அங்கேயும் சாமி இருக்கு, அதுபோல ரோட்டில் இருக்கும் போர்டில் எல்லாம் சாமி போட்டோ இருக்கு.... இப்படி 24 மணி நேரமும் சுத்தி சுத்தி எல்லா இடத்திலும் சாமி இருக்கு. அத காப்பாத்த எதுக்கு நீங்க போராடுறீங்க? ஏன் அந்த சாமியால காப்பாத்திக்க முடியாதா...?
மோடி போன ஜென்மத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? அதனால் தான் இப்போ! பகீர் கிளப்பிய திடீர் அகோரி
அந்த சாமிய காப்பாத்தவா, உங்கள ஆட்சி பண்ண கூப்பிட்டாங்க? உங்களுக்கு ஓட்டு போட்டதற்காக வேலையில்லாதவங்களுக்கு பண்ணுனீங்களா? வயசானவங்களுக்கு பண்ணுவீங்களா? டிரெயின்ல போற முதியோருக்கு டிக்கெட்டை கட் பண்ணி விட்டுட்டீங்க, 60 வயசுக்கு மேல உள்ளவங்க இலவசமாக ட்ரெயின்ல போயிட்டு இருந்தாங்க. இப்ப அந்த டிக்கெட்டை கிடையாதுன்னு சொல்றாங்க.
கோவிட் டைம்ல்ல ட்ரெயின்ல ஒரு பையனும் ஏறல.. அப்பபோ அத்தனை பேரும் இங்கிருந்து குஜராத்துக்கும், பீகாருக்கும் தாயும் பிள்ளையுமா ரோட்டில் நடந்து போய்க்கிட்டு இருந்தாங்க... ரோட்ல ஒருத்தனும் இல்ல அவங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது. அப்ப கூட மிலிட்டரி வண்டி அத்தனை வண்டி இருந்துச்சு அதில் எல்லாரையும் டோல்கேட் டோல்ட்டா ஏத்தி இறக்கி விட்டிருக்கலாமே? அப்ப கூட அதுக்கும் ட்ரெயின் விட்டு அதிலும் பணம் கொடுத்தா தான் கூட்டிட்டு போவேன்னு சொல்லிட்டீங்க என்று அந்த நிகழ்ச்சியில் பொன்வண்ணன் கோபமாக கொந்தளித்து இருக்கிறார்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications