லண்டனுக்கு சென்ற ராஜு..மன்சூர் அலிகான் திட்டியதால் தான் இந்த முடிவா..?? ஆனாலும் இது சூப்பர் தான்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பரீட்சையமான ராஜூ தற்போது வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
திடீரென்று வெளிநாட்டிற்கு மனைவியோடு சென்ற ராஜூவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ராஜு வூட்டில பாட்டி எனும் நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் ராஜூவை திட்டியதால் தான் இந்த முடிவா என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

ரசிக்க வைத்த கத்தி கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலமாக கத்தி கேரக்டரின் பலருக்கும் பரிட்சயமான ராஜு ஒரு காமெடி நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி பலருடைய அன்பையும் பெற்றுக் கொண்டார். இந்த சீரியலுக்கு முன்பு விஜய் டிவியில் திரைக்கு பின்னாடி பல வேலைகளை செய்து வந்துள்ளாராம். ஆனால் அப்போதெல்லாம் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவர் காமெடியான கேரக்டர் மூலமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

பிக் பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றியாளர்
சீரியலில் துரு துருவென பார்த்த இவருடைய நடிப்பை விடவும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் இந்த நிகழ்ச்சிக்காக வேலை செய்து வந்த ராஜு முதல் முறையாக பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஏற்கனவே இதற்கு முந்தைய சீசனில் ராஜு கலந்து கொள்வதற்காக விருப்பத்தை தெரிவித்து இருந்தாராம். ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஐந்தாவது சீசனில் கிடைத்துவிட்டது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்து ஐந்தாவது சீசனில் வெற்றியாளராகவும் ஆகிவிட்டார்.

ராஜு வூட்டுல பார்ட்டி
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு இவருடைய வாழ்க்கை மாறிவிடும், பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பார் என்றெல்லாம் இவருடைய ரசிகர்கள் இவரை எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இவர் அந்த மாதிரி எந்த ஒரு முடிவும் எடுக்காமல் மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக வந்து விட்டார். இவரை அதிகமாக ரசிகர்கள் ரசிப்பதாலோ என்னவோ விஜய் டிவியில் இவருக்கு புதியதாக ராஜு வூட்டுல பாட்டி என்னும் ஒரு நிகழ்ச்சியை கொடுத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களை ராஜு கலாய்த்து வருவதாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டிருந்தார்.

வெளிநாட்டு பயணம்
ராஜூவை பற்றி ரசிகர்கள் மனதில் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளை எல்லாம் மன்சூர் அலிகான் ராஜூவிடம் நேரடியாக கேட்டு திட்டி தீர்த்து விட்டார். அழகாய் இருக்கிறாய் நடித்து பெரிய ஆளாய் வருவாய் என்று பார்த்தால் இப்படி விஜய் டிவியில் சுற்றி சுற்றி வருகிறாயே? உன்னுடைய திறமையை வெளியே சென்று காட்டு என்று இவருக்கு அறிவுரைகளை கூறியிருந்தார். இதற்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது ராஜு தன்னுடைய மனைவியோடு வெளிநாடுகளில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் மன்சூர் அலிகான் திட்டியதால் தான் ராஜு தற்போது விஜய் டிவியை விட்டு வெளியே வந்து அவருடைய மனைவியோடு லண்டன் சென்றிருக்கிறார் போல, என்று கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications