சூப்பர் சிங்கரில் வாக்குவாதம்.. நீங்க சொல்றது தப்பு, பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சசிகுமார் கலந்து கொள்கிறார். அதுபோல நடுவராக இருக்கும் பாடகர் மனோவிற்கும் சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பாடகர் மனோ பாடலில் தவறு இருக்கிறது என்று சசிகுமார் அதிரடியாக பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இப்போது ஜூனியர் பிரிவு பத்தாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கை வெல்வதற்கு இரண்டாவது போட்டியாளர் தேர்வாக இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்
அதுபோல இந்த வாரத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடல்களும் பாடப்படுகிறது. இந்த வாரத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர்ரும் இயக்குனருமான சசிகுமார் கலந்து கொள்கிறார். சசிகுமார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அதிரடியாகவும் ஆர்ப்பாட்டமும் தான் என்ட்ரி கொடுக்கிறார். கடந்த வாரத்தில் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரவில்லை அவருக்கு பதிலாக சீரியல் நடிகை லட்சுமி பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.
மீண்டும் பிரியங்கா
இப்போது மீண்டும் பிரியங்காவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வந்திருக்கிறார். இந்த நிலையில் சசிகுமாரை வரவேற்பதற்காக பிரியங்கா சசிகுமார் போலவே சிரிக்கிறேன் என்று ஏதோ சிரித்து வைக்க அதனால் கடுப்பான சசிகுமார் பிரியங்காவின் தலையில் குட்டு வைத்திருந்தார். பிரியங்கா இதுதான் சசிகுமார் சிரிப்பு என்று சிரிப்பதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் சசிகுமாரிடம் அதேபோல சிரிக்கும்படி கேட்கிறார்களாம். இதனால் தான் சசிகுமார் கடுப்பாகி இருக்கிறார்.
பிரியங்காவிற்கு குட்டு
பிரியங்கா பல நிகழ்ச்சிகளில் சசிகுமார் போல சிரிக்கிறேன் என்று அந்த சிரிப்பை சிரித்து இருக்கிறார். அதை இப்படி சசிகுமார் ஜாலியாக கலாய்த்து இருக்கிறார். அதுபோல இன்னொரு ப்ரோமோ வந்திருக்கிறது. அந்த ப்ரோமோவில் பாடகர் மனோவிடம் சசிகுமார் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதாவது சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் புவனேஸ்வரி தில்லானா தில்லானா பாடலை பாடி இருந்தார்.
சசிகுமார் வாக்குவாதம்
அதற்கு பிறகு பாடகர் மனோவிடம் மாகாபா நீங்க 90ஸ்ஸில் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எதுவோ அதை பாடுங்களேன் என்று சொல்ல, அதற்கு மனோ தான் பாடிய சின்னதம்பி திரைப்படத்தில் இடம் பெற்ற "தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே" என்ற பாடலில் இடம்பெற்ற "தாய் அடிச்சு வலிச்சதில்லை இருந்தும் நான் அழுதேன்" என்ற வரிகளை பாடினார். அப்போது சிறப்பு விருந்தினராக வந்த சசிகுமார் எனக்கு ஒரு சந்தேகம் என்று மனோவின் பாடலை நிறுத்திவிட்டார்.

குழப்பத்தில் பாடகர் மனோ
பிறகு தாய் அடிச்சு படிச்சது இல்லையா? தாய் அடிச்சு வலிச்சது இல்லையா? என்று கேட்க மனோ இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு வலிச்சதில்லை என்றுதான் வரும் என்று மனோ சொல்ல, இல்லை அது படிச்சதில்லை என்றுதான் வரும் என்று சொல்லி மாகாபாவிடம் கேட்க மாகாபாவும் ஆமா படிச்சது இல்லை என்று தான் வரும் என்று சொல்ல, அதேபோல பிரியங்காவும் ஆமாம் படிச்சதில்ல என்றுதான் வரும் என்று சொன்னதும் மனோக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் ப்ரோமோ
இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சசிகுமார் நடித்த கிடாரி என்ற திரைப்படத்தில் சசிகுமார் ஒரு காட்சியில் இதைத்தான் கேட்டிருப்பார். அதில் ஒரு இந்த பாடலை சொல்லி இதில் தாய் அடிச்சு படிச்சதில்லை என்றுதான் வரும் என்று இவர் வாக்குவாதம் செய்வார். அதேபோல இப்பவும் சூப்பர் சிங்கரில் வாக்குவாதம் செய்ய இதை தெரியாத மனோ அதிர்ச்சியில் திணறி இருக்கிறார்.
சிறப்பான திறமை
இது பிராங்காக இருந்தாலும் க்யூட்டாக இருக்கிறது. சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்காக பிரமோஷனுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் சினிமாவில் தான் செய்த பல செயல்கள் குறித்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சசிகுமார் பகிர்ந்திருக்கிறார். அதுபோல கிட்டார் வாசித்து ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications