இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகன்.. இதுதான் காரணமாமே.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: காமெடி நடிகராக பலருக்கும் பரிச்சயமான நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு தற்போது பல் மருத்துவராக இருக்கிறார்.
அவரைப் போலவே அவருடைய மனைவியும் பல் மருத்துவர் இவர்கள் இருவரும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்களாம்.

அது குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் நடிகர் செந்திலின் மகன் மற்றும் மருமகளுடைய புகைப்படங்களும் தற்போது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவர்தான் செந்தில். இப்போதும் எத்தனையோ காமெடி நடிகர்கள் புதிது புதிதாக நடிக்க தொடங்கி இருந்தாலும், கவுண்டமணி- செந்தில் காம்போ இப்போதும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்த செந்தில் இப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இது இவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. அதனால் அதிகமான ரசிகர்கள் இவர் மீண்டும் சினிமாவில் களம் இறங்க வேண்டும் என்று தங்களுடைய ஆசைகளை கூறி வந்தனர்.
செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தானாம். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லையாம். தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.
அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லையாம். ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்ததாம்.
அதே நேரத்தில் நடிகர் செந்திலுக்கு பெண் குழந்தைகள் இல்லை என்பதால் ஜனனியையும் சரி அதே போல செந்திலின் இரண்டாவது மகனின் மனைவியையும் ரொம்பவே பாசமாக பார்த்துக் கொள்வார்களாம். ஆரம்பத்தில் ஜனனியிடம் செந்தில் பேசும்போது அமைதியாக இருப்பாராம். ஆனால் இப்போது இவர்கள்தான் அதிகமாக பேசி கொள்வார்களாம்.

அதே நேரத்தில் மணிகண்டன் மற்றும் ஜனனிக்கு பெண் குழந்தை பிறந்ததும் நடிகர் செந்தில் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். எங்க அம்மாவே எனக்கு திரும்பவும் பேத்தியாக பிறந்து இருக்காங்க என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இப்போதும் அந்த குழந்தையோடு அதிகமாக செல்லம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பாராம்.
இந்த நிலையில் அப்பா ஆசைப்பட்டபடி நான் டாக்டராக மாறிவிட்டேன். அவர் ஆசைப்பட்ட மாதிரி பல ஏழைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். அப்பா பல வருஷம் கழித்து இப்போது சினிமாவில் நடிக்க தொடங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் அதே எனர்ஜியோடு தான் இப்போதும் இருக்கிறார் என்று நடிகர் செந்தில் மகன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். தற்போது நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு மற்றும் அவருடைய மனைவி ஜனனிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications