மேடையில் தன்னை பற்றி சினேகன் பேசிய வார்த்தை.. அதை பகிர்ந்து வேலராமமூர்த்தி கொடுத்த கேப்ஷன்
சென்னை: கவிஞர் சினேகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் வேலராம மூர்த்தி பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் வேல ராமமூர்த்தி இருக்கும் நிலையில் அவரை பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தோடு சினேகன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
கவிஞர் சினேகன் பல ஹிட் பாடல்கள் எழுதி இருந்தாலும் அது பலருக்கும் இவர்தான் எழுதியது என்றே தெரியாமல் இருந்த நிலையில்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியத்தின் மூலம் இவர் பெரிய அளவில் பேசப்பட்டார். அதுபோல சமூக சிந்தனைகள் உள்ள நபராகவும் சினேகன் தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்த விதமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பாடல்களும் எழுதிக் கொண்டிருக்கிறார். அதுபோல எழுத்தாளர் மற்றும் நடிகராக இருக்கும் வேலராமமூர்த்தி பலருக்கும் பரிசேயமாகத்தான் இருக்கிறார். இவர் நடித்த காட்சிகள் இளம் தலைமுறைகளையும் கவர்ந்த வகையில் தான் இருக்கிறது. அதிலும் "இளங்தாரி பய அள்ளி சாப்பிடணும்" என்ற இவருடைய டயலாக் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது.
வெள்ளி திரையில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் வேலராமமூர்த்தி சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் ஆரம்பத்தில் நடிகர் மாரிமுத்து நடித்த நிலையில் அவருடைய மரணத்திற்கு பிறகு வேலராமமூர்த்தி தான் நடித்து வந்தார். இந்த நிலையில் நான் நடிகராக இருந்தாலும் தொடர்ந்து புத்தகங்களும் வேலராமமூர்த்தி எழுதி வருகிறார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் சினேகன் வேல ராமமூர்த்தியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
வேல ரமமூர்த்தி இன் பேரன் சொந்தமாக ஒரு ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அதன் டிரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட சினேகன் பேசுகையில், எனக்கு எப்போதும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீது ஒரு பொறாமை இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா எழுத்தாளருக்கும் படைப்பு வேறு படைப்பாளன் வேராக இருப்பார்கள்.

படைப்பாளனின் முகம் வேராக இருக்கும் படைப்பின் முகம் வேறாக இருக்கும். ஆனால் எனக்கு தெரிஞ்சு ஓஷேவுக்கு பிறகு... காரல் மார்க்ஸ்க்கு பிறகு... பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு தான் படைப்பும் படைப்பாளனும் ஒரே முகத்தில் இருந்தார்கள். அந்த ஆளுமை ஐயா வேல ராமமூர்த்தி இடம் இருக்கிறது. அந்த கம்பீரம் எழுத்து எல்லாம் வேல ராமமூர்த்தி ஐயாவிடம் இருக்கிறது.
இந்த நிலத்தில் விழுந்த விதை எப்படி முளைக்காமல் போகும் என்று வேலராமமூர்த்தி யின் பேரனையும் சினேகன் பாராட்டி இருக்கிறார். இந்த வீடியோவை வேலராமமூர்த்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து சினேகன் என்னைப் பற்றி பேசிய உரை... என்று பகிர்ந்திருக்கும் நிலையில் இது பலருடைய கருத்துக்களை பற்றி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications