பூவே உனக்காக ராஜாவா?.. பீஸ்ட் வீர ராகவனா?.. அரசியல் மெசேஜ் சொன்ன நடிகர் விஜய்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: பூவே உனக்காக விஜய்யா இருக்கணுமா இல்லை பீஸ்ட் விஜய்யா இருக்கணுமா என்பதை யார் முடிவு செய்ய வேண்டும் என்பதை நடிகர் விஜய் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இயக்குநர் நெல்சன் எடுத்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பானது.
இதில் சினிமா தொடர்பான கேள்விகளையும் அரசியல் தொடர்பான கேள்விகளையும் நெல்சன் கேட்டார். அதற்கு விஜய் பல பதில்களை அளித்துள்ளார். ரசிகர்கள் தளபதி என அன்போடு அழைக்கிறார்கள்.

அடுத்த கட்டம்
அடுத்த கட்டமாக தலைவனாக்கும் ஆசையில் இருக்கிறார்கள். உங்களுக்கு தளபதியாக இருக்க வேண்டுமா இல்லை தலைவனாக இருக்க வேண்டுமா, உங்கள் ஆசை என்ன? என விஜய்யிடம் நெல்சன் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் முதலில் சிரித்தார்.

தளபதி ரசிகர்கள்
பின்னர் அவர் பதிலளிக்கையில் தளபதி என ரசிகர்கள்தான் அழைத்து வருகிறார்கள். எனக்கு விஜய்யாக இருக்கத்தான் பிடிக்கும். தளபதியாக இருக்கும் என்னை தலைவனாக்க ரசிகர்கள்தான் விரும்புகிறார்கள். இது அவர்களுடைய விருப்பம். தலைவனாகும் தேவை எழும்போது பார்க்கலாம்.

தலைவன்
மேலும் தலைவனாவதற்கு சூழலும் அமைய வேண்டும். எனவே நான் பூவே உனக்காக படத்தில் வரும் விஜய்யாக இருக்க வேண்டுமா இல்லை, பீஸ்ட் படத்தில் வரும் விஜய்யாக இருக்க வேண்டுமா என்பதை சூழல்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். எனவே அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற சூழல் வந்தால் நிச்சயம் அவர் தொடங்குவார் என்பதுதான் இதன் அர்த்தம்.

பூவே உனக்காக
மேலும் பூவே உனக்காக படத்தில் மிகவும் சாப்ட்னான விஜய்யை நாம் பார்த்தோம். ஆனால் பீஸ்ட் படத்தில் அப்படியல்ல, டிரெய்லரே தாறுமாறாக உள்ளது. காவி நிறத்தை கத்தியை கொண்டு விஜய் கிழிப்பதும் போன்றும் ஒரு மாலை கையகப்படுத்தியவர்களை அடித்து துவம்சம் செய்வதும் என பீஸ்ட்டில் நடித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி
பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சியை தொடங்குவதற்கான நேரமும் சூழலும் அமைந்துவிட்டால் அடுத்தது கட்சி தொடக்கம்தான். இந்த பேட்டியிலிருந்து விஜய் அரசியலுக்கு வர மறுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!











Click it and Unblock the Notifications