பேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. தம்பியின் காதலுக்காக தடைகளை தாண்டிய யோகி பாபு.. திடீர் திருமணம்
சென்னை: நடிகர் யோகி பாபு காமெடியனாகவும், கதாநாயகனாகவும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய தம்பியின் காதல் திருமணத்தை நடத்தி வைத்து தான் நிஜத்திலும் கதாநாயகன் தான் என்பதை நிரூபித்திருக்கிறார். அதோடு யோகி பாபுவின் தம்பி திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அழகும், மினுமினுக்கும் நிறமும் இருந்தால் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற மாயை நிலவி வரும் நிலையில் அதுவெல்லாம் பொய், நடிப்புக்கு திறமை மட்டுமே போதும் என்று அதில் ஜெயித்து காட்டியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது பலரையும் வியந்து பார்க்க வைக்கும் ஒரு நடிகராக யோகி பாபு வளர்ந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் கதாநாயகனாக நடிப்பவர்கள் எல்லாம் நிஜத்தில் அப்படி இருப்பது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் நாங்கள் எப்போதும் ஒரே போல தான் இருக்கிறோம் என்று நிரூபிக்கிறார்கள். அதுபோல இப்போது யோகி பாபு நிரூபித்திருக்கிறார். கடந்த வாரம் செய்யாறில் யோகி பாபுவின் தம்பியின் திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில சினிமா பிரபலங்களோடு நடைபெற்றிருக்கிறது.
இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் இது பற்றிய செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யோகி பாபுவின் உடன் பிறந்த தம்பியான விஜயன் சினிமா இயக்குனர் ஆகும் ஆசையில் தன்னுடைய அண்ணனின் வழிகாட்டுதலோடு பயணித்துக் கொண்டிருக்கிறாராம். தன்னுடைய தம்பிக்காக யோகி பாபுவும் சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் யோகி பாபுவின் கால்ஷீட் முதலான விஷயங்களை விஜயன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம். விஜயனுக்கு சில வருடங்களுக்கு முன்பு மைசூரை சேர்ந்த பெண் ஒருவருடன் சோசியல் மீடியா மூலம் அறிமுகம் உருவாகி இருக்கிறது. facebook மூலமாக உருவான நட்பு, பிறகு காதலாக மாறி இருக்கிறது.
ஆனால் விஜயன் காதலித்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்ணின் வீட்டில் ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு சம்மந்தம் சொல்ல தயங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய தம்பி காதலில் உறுதியாக இருப்பதால் யோகி பாபுவே பெண் வீட்டில் நேரடியாக பேசி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

கடைசியில் இரண்டு தரப்பினரின் சம்மதத்தோடு கடந்த ஜூன் மூன்றாம் தேதி யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாறில் திருமணம் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications