அனுபமா சொன்ன விஷயம்.. நடிகை அதிதி ஆதரவு.. அதை வெளிப்படையாக சொன்னதற்கே பாராட்டணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிக்க அனுபமா பரமேஸ்வரர் சமீபத்தில் பேசிய ஒரு பேட்டி சினிமா வட்டாரத்தை தாண்டி சோசியல் மீடியாவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த காலத்தில் சந்தித்ததாக கூறிய ஒரு உறவு குறித்து அனுபவங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடாத நிலையிலும் ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் அனுபமா பேசியதற்கு, அவருக்கு ஆதரவாக நடிகை அதிதி சங்கர் குரல் கொடுத்து இருக்கிறார்.

அனுபமா குற்றசாட்டு

அனுபமா பேசிய விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் இது ஒரு பிரபல நடிகையின் காதல் கதை என்ற கோணத்தில் பார்ப்பதை விட ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள், மன அழுத்தம் போன்ற விஷயங்களை பற்றிய பேச்சாகத்தான் பார்க்க வேண்டும். சமீபத்திய பேட்டியில் கடந்த கால உறவு தன்னை மனரீதியாகவும், உடல் ரதியாகவும் எந்த அளவிற்கு பாதித்தது என்று அவர் வெளிப்படையாக பேசி இரந்தார்.

தான் காதலித்த நபர் தன்னை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்து வார்த்தைகளாலே தன்னை துன்புறுத்தியதாக அனுபமா பேசி இருந்தார். இந்த நிலையில் இது பற்றி நடிகை அதிதி சங்கர் பேசும்போது, சமீபத்தில் நடிகை பேசிய வீடியோவை நானும் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அதை வெளிப்படையாக பேசியதற்கு அந்த நடிகையை பாராட்ட வேண்டும்.

Anupama Aditi Shankar Emotional Tamil Cinema

நடிகை அதிதி விளக்கம்

ஒருவரை பொதுவெளியில் குறைத்து காட்ட வேண்டும் என்பதற்காக அவர் அந்த விஷயங்களை பேசியதாக நான் நினைக்கவில்லை. அது உண்மையான விஷயமாக தான் நான் பார்க்கிறேன். அவருடைய தனிப்பட்ட அனுபவம் அவர் யாரையும் பொதுவெளியில் குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

அனுபமா சொன்ன குற்றச்சாட்டு! முதல் முறை விளக்கம் கொடுத்த துருவ் விக்ரம்.. நெகிழ்ச்சி வார்த்தை
பல பெண்களும், ஆண்களும் இதே விஷயத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அந்த நடிகை தனக்கு நடந்த விஷயங்களை வெளியில் சொல்லி இருப்பதால் பலரும் இது தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயமாக இருக்கிறது என்று கனெக்ட் பண்ணி வருகிறார்கள் என்று அதிதி கூறி இருக்கிறார்.

அந்நியன், ரெமோவாக மாறும் நபர்

இதற்கு முன்பு அனுபமா பேசும் போது தான் இரண்டு வருடமாக ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அந்த நபர் ஒருநாள் ரெமோ போல காதலை கொட்டுவார். அடுத்த நாள் அன்னியன் போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார், பிறகு சில நாட்கள் கழித்து எதுவும் நடக்காதது போல அம்பி மாதிரி வந்து பேசிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல ஒரு சுடிதார் போட்டிருந்தால் அது உனக்கு ரொம்ப நல்லா இருக்கு என்று பாராட்டுவார். உடனே நாம அவருக்கு பிடித்த மாதிரி உடை போட ஆரம்பிப்போம் பிறகு வேற உடை போட்டால் கூட அது உனக்கு செட்டாகவில்லை இதுதான் உனக்கு பொருத்தமாக இருக்கிறது என்று நம்முடைய ஆசைகளையே அழித்துவிடுவார்.

ரசிகர்கள் கருத்து

அவருக்கு பிடித்த மாதிரி மட்டும்தான் நான் செய்ய வேண்டும் என்று நினைப்பார். சோசியல் மீடியாவில் ஒருவர் கமெண்ட் போட்டு இருந்தால் இது சரியாக இல்லை இதை டெலிட் பண்ணு என்று சொல்லுவார். நான் படத்தின் ப்ரோமோஷனக்கு கலந்து கொள்ள வேண்டும் என்றால் கூட அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று பல விஷயங்களையும் அனுபமா சொல்லி இருந்தார்.

அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அனுபமா இத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லும் நபர் தரப்பில் என்ன நடந்தது என்று அவரும் விளக்கம் கொடுத்தால் தானே உண்மை என்ன என்பது தெரியவரும் என்றும் பலர் சொல்லி வருகின்றனர். இதனால் இந்த விவாதம் ஒரு வாரம் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+