அனுபமா சொன்ன குற்றச்சாட்டு! முதல் முறை விளக்கம் கொடுத்த துருவ் விக்ரம்.. நெகிழ்ச்சி வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் வாழ்க்கை குறித்து பேசிய பேட்டி வெளியாகி பல நாட்கள் ஆனாலும் அதை பற்றிய விவாதம் இன்னும் ஓயவில்லை. குறிப்பாக அவர் யாரை காதலித்தார்? என்ற பெயரை சொல்லாமல் தன்னுடைய உறவில் சந்தித்த மனரீதியான கஷ்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டு இருந்தார்.

அந்த பேட்டிக்கு பிறகு சோசியல் மீடியாவில் பலரும் அந்த முன்னாள் காதலர் துருவ் விக்ரம் தான் என்று யூகிக்க தொடங்க ஆரம்பித்தனர். அதற்கு காரணம் இருவரும் பைசன் படத்தில் இனைந்து நடித்திருந்தது தான். ஏற்கனவே அந்த காலத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிளம்பிய சர்ச்சைகளும் தான் இதற்குக் காரணம். இந்த நிலையில் தன்னைப் பற்றிய பர்சனல் வதந்திகளுக்கு துருவ் விக்ரம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை அனுபமா பேட்டி

அனுபமா பேட்டி வெளியானதில் இருந்து பலரும் துருவ் விக்ரமை சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர். சிலர் துருவ்வின் பழைய பேட்டிகள் புகைப்படங்களை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் அது குறித்து துருவ் இதுவரைக்கும் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் இந்தியா டுடே ரவுண்டு டேபிள் நிகழ்ச்சியில் துருவ் விக்ரமிடம் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் அதிகப்படியான கவனம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

Dhruv Vikram Vijay Anupama

நடிகர் துருவ் விக்ரம் விளக்கம்

அப்போது துருவ் விக்ரம் சொன்ன பதில் நேரடியாக எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் சமீப காலமாக தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை மனதில் வைத்து தான் அவர் விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதாவது, சோசியல் மீடியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் இருந்து வரும் இந்த அளவுக்கு அதிகமான கவனம் என்னை பாதிக்கவே இல்லை என்று சொன்னால் அது உண்மை கிடையாது. நிச்சயமாக சில விஷயங்கள் நம்மை பாதிக்கும். நாமும் மனிதர்கள் தானே? ஆனால் அந்த நேரத்தில் வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை வைத்து நம்மை நாமே புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால் பிரச்சனை அங்கு தான் ஆரம்பிக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

என்னப்பா.. துருவ் எப்படி இருக்க? முதல்வர் விஜய் கேட்ட கேள்வி.. விக்ரம் மகன் ஓபனாக சொன்ன விஷயம்
அதாவது ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசலாம். ஆனால் அவர்களை எல்லாம் திருப்திப்படுத்திக் கொண்டே இருந்தால் தன்னுடைய வாழ்க்கையை வாழ முடியாது என்று சொல்லி இருக்கிறார். நான் யார்? என்னுடைய மதிப்பு என்ன? நான் எதை நம்புகிறேன் என்பதில் எனக்கு தெளிவு இருக்க வேண்டும். நான் நேசிக்கும் மனிதர்கள் யார்? என் வாழ்க்கைக்கு உண்மையான முக்கியமான விஷயங்கள் என்ன? என்பதை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு கருத்தையும் மனதில் போட்டுக் கொண்டே இருந்தால் நம்முடைய அமைதி போய்விடும் என்று கூறியிருக்கிறார்.

Dhruv Vikram Vijay Anupama

துருவ் விக்ரம் பதில்

துருவ் சொல்வது அனுபமாவின் பேட்டிக்கு நேரடி பதிலா? என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் அவரது பேச்சு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. தன்னை பற்றி வெளியே உருவாகும் கதைகள் தன்னுடைய வாழ்க்கையில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவிப்பது போல தான் பேசி இருக்கிறார். சில நேரங்களில் நாம் தனியாக ஒரு படை மாதிரி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் வெளியில் இருந்து Validation தேடிக்கொண்டிருக்கக் கூடாது.

துருவ் விக்ரம் போஸ்ட் போட்டதும், அனுபமா போட்ட புது குண்டு.. முகமூடி கிழிந்தது அப்போது தானாம்!
நம்மை நாமே புரிந்துகொண்டு நம்முடைய வாழ்க்கையில் நமக்கு முக்கியமான விஷயங்களுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல வந்த கருத்து. அதனால் தான் சோசியல் மீடியாவில் இருந்து தன்னைக் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் இருக்கும்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பாராம் ஆனால் மற்ற நேரங்களில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டு தன்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் பழக்கம் தனக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

இதுதான் பொழுதுபோக்கு

அதற்கு பதிலாக புத்தகம் படிப்பது, இசை கேட்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்ற விஷயங்களில் தான் கவனம் செலுத்துகிறேன் என்றும் கூறி இருக்கிறார். அனுபமா ஒரு உறவில் நான் என்னையே இழந்துவிட்டேன்... அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர மிகவும் கஷ்டப்பட்டேன் என்று தன்னுடைய கதையை சொல்லி இருந்தார். ஆனால் துருவ் வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதை விட நம்முடைய உண்மை என்ன என்பதை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அந்த சத்தத்திற்குள் நம்முடைய வாழ்க்கையை தொலைத்து விடுவோம் என்று சொல்லி இருக்கிறார்.

இருவரும் யாரைப் பற்றி பேசுகிறோம் என்று பெயரை சொல்லவில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டவும் இல்லை. ஆனால் இந்த இரண்டு பேட்டிகளும் அடுத்தடுத்து சோசியல் மீடியாவில் வெளியானதும் நெட்டிசன்கள் இருவருடைய பேச்சையும் இணைத்து பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+