சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு ஆலியா எடுத்த முடிவு.. பாராட்டிய கணவர்... காரணம் இதுதானா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஆலியா மானசா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இனியா சீரியலில் பிஸியாக நடித்து வரும் ஆலியா மானசா திடீரென்று தான் சுற்றுலாவிற்கு கிளம்புவதாக புகைப்படம் வெளியிட ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

நடிகை ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவ் ஏற்கனவே கயல் சீரியலில் எழிலாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு சுற்றுலா கிளம்பி புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்கள்.

அப்போ ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி

அப்போ ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக ரீல் ஜோடியாக அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஒரே சீரியலில் நிஜ ஜோடியாக மாறிவிட்டனர். இந்த சீரியலில் இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தம் அழகாக இருப்பதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் க்யூட்டாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்ததனர்.அதை அப்படியே பின்பற்றிய இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகும் அப்படியே காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

குழந்தையும் நடிக்க வந்தாச்சு

குழந்தையும் நடிக்க வந்தாச்சு

திருமணம் முடிந்தாலும் குழந்தைகள் வந்தாலும் நாங்கள் எப்போதும் இளம் தம்பதிகள் தான் என்பதை இவர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய மகள் ஐலாவையும் சீரியலில் இறக்கி இருக்கின்றனர். சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் கயல் சீரியலில் எழில் உடைய கனவில் வரும் குழந்தையாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை கொண்டாட்டம்

ஏற்கனவே ஆலியா மானசா தன்னுடைய குழந்தையோடு அடிக்கடி விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல போட்டோ சூட்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சீரியலிலும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் தற்போது அதற்கெல்லாம் விடுமுறை எடுத்து விட்டு விடுமுறை கொண்டாட்டம் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.

திடீர் சுற்றுலா

திடீர் சுற்றுலா

ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் தற்போது டிஆர்பியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் விக்ரம் நல்லவரா? கெட்டவரா? என்பது தெரியாமல் இனியா தவித்து வரும் நிலையில் தன்னுடைய சுயமரியாதைக்கும், தன்னுடைய தந்தைக்கும், அவமரியாதை ஏற்பட்டு விடாத வகையில் துணிச்சலாக இந்த சீரியலில் ஆலியா பேசி வருவது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென இவர் சுற்றுலா போகப் போறேன் என்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் அப்போ சீரியல் என்ன ஆனது என்று கேள்வி கேட்க, இந்த முடிவிற்கு அவருடைய கணவர் சமூக வலைதளத்தில் பாராட்டை தெரிவித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு தான் ஆலியாவின் இரண்டாவது குழந்தை ஆரூஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஆரூஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் தான் இந்த சுற்றுலாவா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+