எதிர்பார்க்காத பல செயல்கள் எல்லை மீறி நடக்கும்..அதற்காக பலமுறை அழுது இருக்கிறேன்..மனம் திறந்த அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்சலி தான் சினிமா வாழ்க்கையால் படும் கஷ்டங்களை பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு அஞ்சலி நடிப்பாரா என்ற கேள்வியை குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார்.

தான் இதுவரைக்கும் ரகசியமான உறவில் இருந்ததை பற்றி வெளிப்படையாக முதல் முறையாக பேசி இருக்கிறார்.

கற்றது தமிழ் திரைப்படம்

கற்றது தமிழ் திரைப்படம்

நடிகை அஞ்சலி சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பு விளம்பர மாடலாகவும் நடித்தும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டும் இருந்திருக்கிறார். பிறகு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு யதார்த்தமாக இருந்தது. முதல் திரைப்படத்தில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல ரசிகர்களின் மனதில் டக்கென்று ஒட்டிக்கொண்டார்.

மாற்றம் தந்த அங்காடித்தெரு

மாற்றம் தந்த அங்காடித்தெரு

அதனைத் தொடர்ந்து அஞ்சலிக்கு ஒரு சில திரைப்படங்கள் வாய்ப்புகள் வந்தாலும் இவருக்கு அங்காடி தெரு திரைப்படம் பெரிய அளவில் ரீச் கொடுத்து விட்டது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அங்காடி தெரு படத்தில் யதார்த்தமான நடிப்பை காட்டி அனைத்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்து விட்டார். திரைப்படத்தில் கேரக்டராகவே மாறிய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. அதுவும் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டை சுழி, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.

பிக் பாஸுக்குள் என்ட்ரி

பிக் பாஸுக்குள் என்ட்ரி


தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் பால் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து RC 15 என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.தன்னுடைய பால் திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டிருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருக்குமோ என்று பலர் இவரைப் பற்றி எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால் தன்னுடைய பிரமோஷனுக்காக வந்ததாக கடைசியில் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் நெருக்கமான காட்சிகளின் நடிப்பதற்கு கடினமா அல்லது முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பது கடினமா என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

எல்லை மீறிய காட்சி

எல்லை மீறிய காட்சி

அதற்கு அஞ்சலி தான் அந்தரங்க காட்சிகளில் நடிப்பது கடினம் என்று கூறினார். எல்லா காட்சிகளிலும் நடிப்பதாகத் தான் எண்ணுகிறேன் ஆனால் ஒரு சில நெருக்கமான அந்தரங்க காட்சியாக வரும்போதுதான் அது என்னுடைய எல்லையை மீறி செல்லும்போது, சில சமயங்களில் நான் கேரவனுக்கு சென்று அழுது இருக்கிறேன். ஆனால் பின்பு நாம் ஒப்புக்கொண்ட பிறகுதானே அந்த காட்சி எடுக்கப்பட்டது. இதனால் நாம் அதனை நடித்துக் கொடுத்தாக வேண்டும் என்று மனதை தேற்றிக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சில சமயங்களில் முத்த காட்சிகளில் நடிக்கும்போது நம்முடன் நடிக்கும் நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேலே செல்ல மாட்டார்கள் என்று தெரியும், இருந்தாலும் இதனை நான் மக்களின் முன்பு நடிக்கிறோம் எப்படி இருக்கும் என்று இவருக்கே கேள்வி எழுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+