திருமணத்திற்கு ரெடியான அடுத்த ஜோடி...பாவனியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதானா..!!??
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன பாவனி ரெட்டி தற்போது தான் காதலிக்கும் விஷயத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நேரத்தில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
பாவனி ரெட்டிக்கு முதல் திருமணம் நடைபெற்று இருந்தாலும் தற்போது அவருடைய கணவர் உயிரோடு இல்லை. இதனால் இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவருடைய பல ரசிகர்கள் இவருக்கு அறிவுரைகளையும் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்தான் பிக் பாஸ் அமீரை காதலிப்பதாக அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு பாவனி ரெட்டி மீண்டும் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம்.

விஜய் டிவியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலின் மூலமாக தமிழ் சீரியலில் அடி எடுத்து வைத்த பாவனி ரெட்டி அதற்குப் பிறகு சன் டிவி சீரியலிலும் நடித்து வந்தார். சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த பாவனி திடீரென்று சீரியல்களில் இருந்து விலகி திரைப்பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து போஸ்ட் போட்டு ரசிகர்களை அதிகப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை இவர் தவற விட்டு விடாமல் பயன்படுத்திக் கொண்டார்.

நெருடிய சோக கதை
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பாவனி அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியில் பாதியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமானவர்தான் அமீர். இவர் ஒரு நடன மாஸ்டராக இருந்தாலும் அனைவருக்கும் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் தான் இருந்தார். ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த பிறகுதான் யார் இவர் என்று பலரும் தேடத் தொடங்கி இருக்கின்றனர். அமீர் உடைய சோகமான கதையை கேட்டு பலர் இவர் மீது அனுதாபங்களை கொட்டி வந்தனர். அது போல பாவனியும் தன்னுடைய காதல் கணவர் இறந்த பிறகு பட்ட கஷ்டங்களை கூறி பலருடைய கண்ணீருக்கு காரணமாகி விட்டார்.

ஆரம்பத்தில் சந்தேகம்தான்
அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதிலிருந்தே பாவனியோடு தான் அதிகமாக பழகி வந்தார். அவர் சக போட்டியாளர்களிடம் சகஜமாக நடந்து கொண்டாலும் பாவனியிடம் மட்டும் அதிகமாக கேரிங் எடுத்துக் கொண்டது பார்த்த பல ரசிகர்கள் இவர் நடிக்கிறாரா?? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அமீர் அந்த ரியாலிட்டி ஷோவில் தான் பாவணியை காதலிக்கும் செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். ஆனால் பாவனி அமீரை ஆரம்பத்தில் தம்பி என்று அழைத்து செல்லமாக கலாய்த்து வந்தார். அது மட்டுமல்லாமல் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றெல்லாம் கூறி வந்தார்.

விரைவில் டும் டும் டும்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அமீர் மற்றும் பாவனி இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர்கள் அப்படி இருந்து வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் பாவனி அமீருக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எப்போது திருமணம் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அமீர் மற்றும் பாவனி இருவரும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் வாழ்க்கையில் சேர்ந்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்றும் இவர்களுடைய காதலுக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விரைவில் இவர்களுடைய திருமணம் இருக்கும் என்று இவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் கூறி வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications