சொல்ல முடியாத அளவிற்கு ஏமாற்றம்.. யாருக்கும் அந்த சூழ்நிலை வரக்கூடாது.. நடிகை மின்னல் தீபா எமோஷனல்
சென்னை: நடிகர் சரத்குமார் நடித்த மாயி திரைப்படத்தில் வடிவேலு பெண்பார்க்க செல்லும் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த தீபா தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஒரு சில நடிகைகள் சில கேரக்டரில் நடித்தால் கூட பெரிய அளவில் அவர்களுக்கு பிரபலம் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் "வாம்மா மின்னல்" என்ற காட்சியில் மாயி திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் வந்து போன தீபா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைக்கவில்லை.

அதனால் பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகிணி சீரியலில் வில்லி கேரக்டரில் தீபா நடித்திருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, சமீபத்தில் முடிவுக்கு வந்த சுந்தரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் தீபாவிற்கு பாசிட்டிவ் கேரக்டர் தான். அதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அதிகமான பாராட்டு கிடைத்து வந்தது. இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் நடிகைகள் எல்லோருமே தங்களுடைய திறமையை காட்ட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனையால் பலருக்கு உண்மையான திறமையை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்மென்ட் செய்து போனால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சூழ்நிலை சினிமாவில் நான் சந்தித்ததால் எனக்கு அது வேண்டாம் என்று சின்னத்திரை பக்கம் வந்து விட்டேன்.

அதற்கு பிறகு எனக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வந்தது. அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் சினிமாவில் இருக்கும் போது நம்மிடம் சொல்வது ஒன்று ஆனால் அங்கு செய்வது ஒன்றாக இருக்கும். நம்மிடம் ஒரு கேரக்டர் நீங்க தான் செய்யப் போறீங்க என்று கூப்பிடுவாங்க. நாம அதற்காக அங்கு போகும் போது நம்மிடம் சொல்லாமலே அந்த கேரக்டரில் வேறு ஒரு நபரை நடிக்க வைத்து விடுவார்கள். அது நமக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரியும்.

சில நாட்களில் ஷூட்டிங் ரொம்ப தூரம் இருக்கும் இடத்திற்கு நாம கஷ்டப்பட்டு ட்ரெயினிலோ அல்லது பஸ்ஸிலோ போய் சேருவோம். ஆனால் அங்கு நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்த மாதிரி நிலைமை எந்த நடிகைகளுக்கும் வரக்கூடாது என்று சொல்வேன். ஆனால் பல நடிகைகள் இதே சூழ்நிலையை அனுபவித்து இருப்பார்கள்.
சில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது இந்த கேரக்டரில் நாம நடித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமக்கு தோன்றும். தியேட்டரில் நம்முடைய முகத்தை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆனால் சரியான வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை என்று அந்த பேட்டியில் தீபா உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications