கண்ணீரோடு வாழ்ந்து வரும் நடிகை திவ்யாவுக்கு மகிழ்ச்சி கிடைத்து இருக்கிறது... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக குடும்பத்தினரும், நண்பர்களும் வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பரபரப்பு ஏற்படுத்திய திவ்யா ஸ்ரீதர் தற்போது பல மாதங்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக தன்னுடைய குழந்தையின் பரிசத்தை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய குடும்ப பிரச்சனை
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலின் மூலமாக தமிழுக்கு வந்த கன்னட நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர் சின்னத்திரை நடிகர் ஆன அர்ணாவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் கதாநாயகன் ஆன அர்ணாவ்க்கும் இவருக்கும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிவந்த ரகசியங்கள்
தன்னுடைய காதல் கணவர் அர்ணாவின் மீது திவ்யா அதிகமாக காதல் வைத்திருந்ததின் வெளிப்பாடே இந்தப் பிரச்சனை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார். ரகசியமாக திருமணத்தை செய்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய திருமண செய்தியையும், கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் பகிர்ந்து வந்தார். அதற்கு பிறகு தான் இவர்களுடைய திருமண வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. செல்லம்மா சீரியலின் கதாநாயகியோடு திவ்யாவின் கணவருக்கு நட்பை தாண்டிய பழக்கம் இருப்பதாக திவ்யா குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில் அர்ணாவ்க்கு எதிராக பல ரகசியங்களை பலர் வெளியே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

சீரியலிலும் தொடரும் சோகம்
இந்த நிலையில் திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததன் காரணமாக அர்ணாவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பின்பு ஜாமினில் வந்து தற்போது தன்னுடைய சீரியலில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதுபோல திவ்யா ஸ்ரீதரும் செவ்வந்தி சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் இவர் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதைக் குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் அவர் பேசியிருந்தார். தான் நடிக்கவில்லை என்றால் தன்னுடைய குடும்பத்தை பார்ப்பதற்கு யாரும் இல்லை. தனக்கு வருமானம் வேறு எதுவும் இல்லையே என்று அவர் கண்ணீரோடு கூறி இருந்தார். இந்த சீரியலிலும் இவர் கணவர் தற்போது இறந்து போய்விட்டதாகவும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் திவ்யா வளர்ப்பதற்காக படும் போராட்டங்களை பற்றியதாகவும் தான் இருந்து வருகிறது.

மகிழ்ச்சி ஆசிர்வாதங்களோடு தொடரட்டும்
தமிழ் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதருக்கு அதிகமான ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஒரு முறையில் அவர் மீது பலருக்கும் பரிதாபம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திவ்யா சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாக இருந்து தன்னுடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் மீண்டும் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருக்கு ஐந்தாவது மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் நேற்று இவருக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்து வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருக்கின்றனர். அதைப் பார்த்து மகிழ்ச்சியாக இனி உங்களுடைய தாய்மையை உணர்ந்து கொண்டாடுங்கள் என்று ரசிகர்கள் பலர் இவருக்கு ஆறுதல் கூறி வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications