நடிகை கனகாவின் உயிருக்கு அச்சுறுத்தலா? காவல் நிலையம் சென்ற நடிகை! நடந்தது என்ன? பிரபலம் பேட்டி
சென்னை: நடிகை கனகா குறித்து பத்திரிக்கையாளர் சுபர் வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கனகாவிற்கு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதால் கனகா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக சுபர் கூறி இருக்கிறார். அதோடு கனகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் கூறியிருக்கிறார்.
நடிகை கனகாவை இப்போது உள்ள ஜெனரேஷன் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவர் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வந்தார். கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் இப்போதும் பலராலும் கொண்டாடப்படும் திரைப்படம் ஆக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த திரைப்படம் வெளியாகி 36 ஆண்டு கடந்த வெற்றி கொண்டாடப்பட்டது. அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை கனகா இப்போது திரைப்படத்தில் நடிக்கவில்லையே என்று பலரும் அவர் குறித்து தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கனகாவின் தற்போதைய நிலை
சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை குட்டி பத்மினி எதார்த்தமாக நடிகை கனகாவை சந்தித்திருந்தார். அப்போது கனகாவுடன் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். கனகாவிடம் தான் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்கிறேன் என்றும் கூறி இருந்தார். ஆனால் குட்டி பத்மினி மீண்டும் தொடர்பு கொண்டபோது அதற்கு கனகா பதிலளிக்கவில்லை. அவர் யாரிடமும் பேச விரும்பாமல் தனிமையில் இருக்க விரும்புகிறார், அவர் வெளி உலகத்தில் தன்னை கனகா என்று அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
சர்ச்சை
இதோடு கனகா இன்னும் ஆண்ட்ராய்டு போன் கூட யூஸ் பண்ணவில்லை, சாதாரண செல்போன் தான் யூஸ் பண்ணுகிறார் அவருக்கு வாட்ஸ் அப் என்றால் என்னவென்று தெரியாது என்றெல்லாம் குட்டி பத்மினி பேசியிருந்தார். கனகா பற்றி பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் அடிக்கடி பரவி வருகிறது. அவர் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் போது அவருடைய வீட்டிற்குள் இருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகை கனகாவுக்கு பிரச்சனை
ஆனால் தன்னைப் பற்றிய எந்த செய்திகளுக்கும் விளக்கம் அளிக்காமல் இருக்கும் கனகாவுடன் சமீபத்தில் ஒரு தொகுப்பாளர் போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் கனகா பற்றி பத்திரிகையாளர் சுபர் பேசிய விஷயம் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கனகா தன்னுடைய வீட்டிற்குள் இருக்கும் நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது, கனகாவின் வீட்டு சுற்று சுவரால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. அது குறித்து கனகா போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திருக்கிறார் என்றும் சுபர் கூறி இருக்கிறார். அதோடு சமீபத்தில் ஒரு யூடிட்யூபரிடம் கனகா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி கனகா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications