கன்னிகா எடுத்த திடீர் முடிவு..என்ன இப்படி மாறிவிட்டார்..?? குவியும் ரசிகர்களின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கன்னிகா தற்போது குழந்தைகளோடு குழந்தையாய் மாறி செய்து இருக்கும் செயலை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக்களை கூறினாலும், என்ன இந்த திடீர் முடிவு என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

திரைப்படங்களில் பிசியாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது கன்னிகா வெளியிட்ட வீடியோஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

கிடைத்த முதல் வாய்ப்பு

கிடைத்த முதல் வாய்ப்பு

கன்னிகா ரவி தமிழ் நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு விஜே வாக தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு, சத்திரபதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தலும் அவருக்கு அந்த வாய்ப்பு சிறப்பாக அமையவில்லை. கன்னிகா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல் தானாம். கன்னிகா முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

கல்யாண வீடு சீரியல்

கல்யாண வீடு சீரியல்

இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. ஏற்கனவே இந்த சீரியலின் வேற ஒரு கேரக்டர் நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் பாதியிலே விலகிவிட இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. கல்யாண வீடு சீரியல் இவருக்கு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது. இவருடைய நீண்ட முடி இவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது. கன்னிகா நீண்ட முடிக்கான அழகி பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

ஓவியம் அத்துபிடி

ஓவியம் அத்துபிடி

சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் கன்னிகா தற்போது தான் கற்ற கல்வியினை பிற குழந்தைகளுக்கு பகிர்ந்துள்ளார். ஓவியம் இவருக்கு அத்துபிடி என்பது பலருக்கும் தெரியும். அந்தக் கலையை குழந்தைகளுக்கு இவர் கற்றுக் கொடுப்பதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இது ஒரு நல்ல முயற்சி தான் ஆனால் இப்படியே இருந்துவிட்டால் எப்படி என்று கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

அப்டேட் கேக்கும் ரசிகர்கள்

அப்டேட் கேக்கும் ரசிகர்கள்

சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் போது கன்னிகா திரைப்படம் ஒன்றில் நடிப்பதாக கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது அப்படி எதுவும் அப்டேட் இல்லையா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+