மாஸ்டராக மாறிய கன்னிகா... சிறப்பான தொடக்கத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகையாக பலருக்கும் பரிச்சயம் ஆன கன்னிகா தற்போது சிலம்பம் ஆசிரியராக புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
நமக்கு கம்பு சுத்துறது கைவந்த கலை, அந்த கலையை நம்மோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது என்று குழந்தைகளுக்கு தன்னுடைய வீட்டிலேயே சிலம்பு ஆசிரியராக மாறி இருக்கிறார்.
என்னதான் பிசியாக இருந்தாலும் கிடைக்க நேரங்களில் கன்னிகா செய்யும் சிறப்பான செயலை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
பாடலாசிரியர் சினேகனின் காதல் மனைவியான கன்னிகா ரவி சுத்தமான தமிழ் பெண் என்பது அனைவருக்குமே தெரியும். இவர் அருப்புக்கோட்டையில் பிறந்து இருந்தாலும் இவருடைய தந்தையின் ஆசைக்காக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் தற்காப்பு கலைகளையும் நன்கு கற்று தெளிந்து இருக்கிறார். இவர் காலேஜ் படிக்கும்போது இசையருவி சேனலில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சன் டிவி சீரியலில் அறிமுகம்
பாடல் ஆசிரியர் சிநேகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கன்னிகா தன்னுடைய திறமையை நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாமல் தனக்குள் இருக்கும் நடனம், ஓவியம், சமையல் திறமை, சிலம்பாட்ட திறமை போன்றவற்றை சமூக வலைத்தளத்தில் வெளிக்காட்டி பார்ப்பவர்களை மிரள செய்துள்ளார். நடிகை கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியலில் சூர்யா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் இவருக்கு முன்பு வேறொரு நடிகை நடித்துக் கொண்டிருந்தார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியதும் அவருக்கு பதிலாக கொஞ்ச நாட்கள் இந்த சீரியலில் நடித்திருந்தார்.

ரகசியமான காதல்
கொஞ்ச நாட்களாக அந்த சீரியலில் நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வந்தனர். அதுவும் இவருக்கு பிளஸ் பாயிண்டாக இவருடைய நீண்ட கூந்தல் இருந்து வருகிறது. இந்த தலைமுடிக்காகத்தான் இவருக்கு நீண்ட தலை முடிக்கான விருதுகள் கிடைத்திருக்கிறதாம். ஆரம்ப காலகட்டத்தில் கன்னிகா மாடலிங் மூலமாக சினிமா வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போதே சினேகனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டு விட்டதாம். இவர்கள் இருவரும் எட்டு வருட காதலை ரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

காதலுக்கு கடிவாளம்
காதலிக்கும் நேரங்களில் அதிகமாக வெளியே சுற்றினதே கிடையாதாம். ஏதாவது ஒரு இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததே இல்லையாம். தங்களுடைய துறையில் தங்கள் திறமையை வெளிக்காட்டி ஜெயித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் எட்டு வருடங்களை கடந்து வந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கான சிறப்பான வாய்ப்பு அமையவில்லையாம். அதனாலே திருமணம் செய்து கொண்டதாக இருவரும் கூறி இருக்கின்றனர்.

சிலம்ப ஆசிரியர்
திருமணத்திற்கு பிறகும் தங்கள் இருவருடைய துறைகளிலும் தாங்கள் பிஸியாக தான் இருந்து வருவதாக கூறியிருக்கின்றனர். தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதுபோல சினேகனும் பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டும் பாடல்கள் எழுதிக் கொண்டும் இருக்கிறார். எந்த நிலையில் கன்னிகா தற்போது தனக்கு தெரிந்த சிலம்பம் கலையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் மாஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார். வீட்டு மொட்டை மாடியில் குழந்தைகளுக்கு சிலம்ப நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இந்த முயற்சி சிறப்பானது என்று வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications