"கமல்”கட்சி நடிகையை ட்விட்டரில் சீண்டி பார்த்த நடிகை"கஸ்தூரி”..என்ன பதில் கிடைச்சிருக்குன்னு பாருங்க
சென்னை: குழாயடி சண்டைகளுக்கு சற்றும் சளைத்ததில்லை இந்த ட்விட்டர் விவாதங்கள் என்று சொல்லத் தோன்றும் அளவிற்கு ஒரு சில ட்விட்டர் வார்த்தை போர்கள் இருந்து வருகிறது.அப்படிதான் சமீபத்தில் இரு நடிகைகளின் ட்விட்டர் கருத்து மோதல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் எங்கேயும் எப்போதும் படத்தில் கதாநாயகியின் சகோதரியாகவும், வருத்தப்படா வாலிபர் சங்கம் படத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நடித்து பிரபலமானவர் குணச்சித்திர நடிகை வினோதினி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமூகப் பிரச்சனைகளை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார்.இவர் சமீபத்தில் தான் நடிகர் கமலஹாசன் முன்பு அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.தானும் இருக்கிறேன் என்று தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள ஏதாவது கருத்தை கூறி யாரையாவது வம்பு இழுத்து சர்ச்சையில் மாட்டிக் கொள்வதே பழக்கமாக வைத்திருப்பவர் நடிகை கஸ்தூரி.

தற்போது இந்த இரு நடிகைகளுக்கும் இடையே ட்விட்டரில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. நடிகை வினோதினி மக்கள் நீதி மையத்தில் இணைந்ததை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கஸ்தூரி 'கமல் சார் கட்சியில் சேர்ந்தது ஏதோ சேவைக்குன்னு நினைச்சா...இவங்க செய்யுற வேலைய பாருங்களேன், உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல எதிர்காலம் இருக்கு' என்று பதிவு செய்திருந்தார்.
இதைப் பார்த்து கொதித்துப்போன வினோதினி உடனே கஸ்தூரிக்கு ஒரு பக்க அளவிற்க்கு பதிலடி கொடுத்துள்ளார்...".அந்தம்மா... அதுதான்... திராவிடர்களை திராவிடியாஸ்னு கூப்பிட்டு ட்விட்டர் வரலாறு படைத்த பெண்மணி... நான் ஏதோ சேவை செய்ய மய்யத்துல இணைஞ்சேனாம், ஆனா உமா கார்கி போன்ற தேச பக்தாள் போட்ட ட்வீட்டயெல்லாம் காண்பித்து அவாளுக்கு எதிரா வன்மம் பரப்புறேனாம்னு கதறினாரே...
அம்மாடி.. நான் மக்களுக்கு சேவை செய்யப்போறேன்னு எப்போம்மா சொன்னேன்? மக்களுக்கு கண் இமைக்காமல் சேவை செய்ய நான் என்ன நரேந்திரவா? (விவேகானந்தரச்சொன்னேன்). அவங்களுக்கு என்ன தேவையோ அதை அவங்க பார்த்துக்குவாங்க. எல்லாரும் மழுங்கடிக்கப்பட்ட மாட்டு மூளைக்கொண்டவங்க இல்ல.
என்னோட/எங்களோட/பலரோட முயற்சி ஒண்ணே ஒண்ணுதான்... நான் பிறந்த ஹிந்து மதத்த வெச்சு கேவலமா கேம் ஆடுற ஒரு க்ரூப் இருக்கே... யாருன்னு என் வாயால ஏன் சொல்லணும்... அவங்கள... fill in the blanks... (இதை நான் ருத்ரம் சமகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சௌந்தர்ய லஹிரி கந்த சஶ்டி கவசம் அனைத்தும் படிக்கும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அக்மார்க் ஹிந்துங்குற அடிப்படைலயே சொல்றேன்).
இதை செய்யுறதுக்கு மய்யத்துல இருக்கோமோ, மய்யத்து ஆபீஸ் வாசல்ல நிக்கிறோமோ, அறிவாலயத்துல இருக்கோமோ, 200 ரூ வாங்குறோமோ, கக்கூஸ் கழுவுறோமோ, எங்களுக்குள்ள அடிச்சிக்கிறோமோ, அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்கபோயி உங்க மதம் எப்படி எல்லா மதத்தவிடவும் சிறந்தது, பிரதமர் துவாபர யுகத்துல அமெரிகா சென்றிருந்தால் எப்படி புஸ்பகவிமானத்தில் சென்றிருப்பார்..
அன்றே சொன்னார் விசுவாமித்திரர் அப்படின்னு வாட்ஸாப் தகவல்கள ஷேர் பண்ணிட்டு, அடுத்த ஜென்ம புண்யத்துக்கு பூஜை புனஸ்காரத்துக்கு நடுவுல ட்விட்டர்ல ரெண்டு கெட்டவார்த்தைய கூசாம பேசிட்டு, ஒரு க்ளாஸ் கோமியம் குடித்துவிட்டு படுத்துத்தூங்குங்க. இன்றும் திராவிடர்களை திராவிடியாஸ் என்ற வார்த்தையைக்கொண்டு நீங்கள் அழைத்தது எவ்வளவு சாமர்த்தியமான வன்மச்செயல் மற்றும் வக்கிரத்தின் உச்சம் என்று நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
ஜெய் ஜக்கம்மா. (எல்லாரும் ஒண்ணு சொல்லுறாங்க, அதான் நானும்...)இந்த டவிட்டை வைத்து இருதரப்பினரும் மாறி மாறி வார்த்தை போல் ஈடுபட்டு ட்விட்டர் தளத்தை சூடாகவே வைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications