Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை நிறைய கண்ணாடி வளையல்.. ரசிகர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை நக்ஷத்திரா நாகேஷ் தான் நவராத்திரி பண்டிகையின் ஐந்தாவது நாள் எடுத்த புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அதில் கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு புடவையில் இவர் எடுத்த புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

90ஸ் தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் ஒருவர் தான் நக்ஷத்திரா. இவர் தன்னுடைய தெளிவான தமிழ் உச்சரிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார். 2014 ல் வானவில் என்னும் நிகழ்ச்சியை தந்தி டிவியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமான இவர் அதற்குப் பிறகு சன் டிவியில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

nakshatra nagesh


சன் சிங்கர் எனும் நிகழ்ச்சியின் மூலமாக பாடகர்களையும், பாட்டு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். தனக்கே உரிய சிரிப்பான பேச்சால் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றிருந்தார். பிறகு சில வருடங்களிலேயே வாணி ராணி என்னும் சீரியலில் ருத்ரா கேரக்டரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலுக்கு பிறகு தான் இவருடைய நடிப்பை பார்த்த குஷ்பு இவருக்கு பேச மட்டுமல்ல நடிக்கவும் தெரியும் என்று தான் இயக்கி நடித்த லட்சுமி ஸ்டோர் எனும் சீரியலில் பாக்கியலட்சுமி என்ற கதாநாயகி கேரக்டரை கொடுத்திருந்தார்.

“கோலங்கள்” சீரியல் ஆனந்தியா? அழகான தலைமுடியை இழந்தது இதற்காகவா? நெகிழ வைத்த நடிகை மஞ்சரி


லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த சீரியல் மூலம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய மனதையும் நக்ஷசத்திரா கவர்ந்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த சீரியல் திடீரென்று சீரியல் முடிக்க பட்டது. இந்த சீரியல் முடிவடைந்த பிறகு சில மாதங்களாக இவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமூக வலைதளத்தில் எப்போதும் போல ஆக்டிவாகவே இருந்தார். அதுபோல பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து தான் நாயகி சீரியலில் இரண்டாவது பாகத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியலும் திடீரென முடிவுக்கு வந்து விட்டது.

பிக் பாஸ் போட்டியாளருக்கு சப்போர்ட் தெரிவித்து மணிமேகலை பதிவு.. மாறாத குக் வித் கோமாளி நட்பு


அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு பெரிய பிரபலம் அடைந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. இதற்கிடையில் ராகவ் என்பவரை திருமணம் செய்திருந்தார்.


திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் எந்த சீரியலிலும் இன்னும் கமிட்டாகவில்லை. இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் வீட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் ஐந்தாவது நாள் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.


அதில் கை நிறைய வளையல்கள் போட்டு பட்டு புடவையில் இவர் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் போட்டோ அழகாக இருக்கிறது என்று பாராட்டினாலும் அடுத்து எப்போது சீரியலுக்கு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+