8 மணி நேரம் டான்ஸ் ஆடினால் 500 ரூபாய் தான்! உண்மை தெரியாம பேசாதீங்க! பவித்ரா லட்சுமி எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
அதிலும் சிலர் என்னை என்னுடைய ஆரம்பகால வாழ்க்கையை வைத்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான் என்று சில விஷயங்களை பவித்ரா பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்த பவித்ரா லட்சுமி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அந்த சீசனில் புகழோடு சேர்ந்து இவர் ஜோடியாக கலந்து கொண்டு இருந்தார். அப்போது புகழ் பவித்ராவிடம் அதிகமாக கலாய்த்து கொண்டிருந்தார். அதுபோல சமூக வலைத்தளத்திலும் பவித்ராவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து பவித்ராவிற்கு வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கண்கலங்க பேசியிருக்கிறார். அதில் என்னை பார்த்து சிலர் சமூக வலைதளத்தில் கேட்கும் கேள்வி என்னவென்றால் நான் ஆரம்ப காலகட்டத்தில் மேடைகளிலும், கிராமங்களில் நிகழ்ச்சிகளிலும் டான்ஸ் ஆட போயிருக்கிறேன். அது பற்றி தான் கேள்வி கேட்கிறார்கள்.
நான் அந்த நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு சம்பளம் மட்டும் காரணம் அல்ல. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா? இதற்குப் பிறகு இதிலிருந்து ஒரு வாய்ப்பு வந்துவிடாதா? என்று தான் நான் அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி இருந்தேன். ஆனால் அது குறித்து சிலர் காசு கொடுத்தா நீ என்ன வேணாலும் பண்ணுவியா? காசு கொடுத்தா எங்க வேணாலும் போவியா? என்றெல்லாம் கேக்குறாங்க.
ஆனா அவங்க இவ்வளவு பேசுற அளவிற்கு எனக்கு அந்த நிகழ்ச்சியில் காசு எல்லாம் கிடைக்காது. எட்டு மணி நேரம் தொடர்ச்சியா டான்ஸ் ஆடுனா தான் ஐநூறு ரூபா கிடைக்கும். அதுவும் அந்த நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் பத்து பாடல்களுக்காவது டான்ஸ் ஆட வேண்டியது இருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடி வெறும் 500 ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும். அந்த சம்பளத்தை தாண்டியும் அதிலிருந்து ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக தான் நான் அந்த மாதிரி நிகழ்ச்சியில் எல்லாம் டான்ஸ் ஆட போயிருந்தேன்.
எங்க குடும்பத்தில் எல்லாருமே ஓரளவிற்கு செட்டில் ஆகிவிட்டார்கள். நான் மட்டும்தான் எதுவுமே செய்யாமல் இருந்தேன். அப்போ எனக்கு ஏதாவது என்னுடைய வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று சூழ்நிலை இருந்தது. அதே நேரத்தில் என்னுடைய அம்மா என்னை சிங்கிளாகத்தான் வளர்த்து வந்தார். அவரும் சமீபத்தில் இப்போது இறந்து போய்விட்டார். அம்மா இறக்குறதுக்கு முன்னாடி நான் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னு நினைச்சேன். ஆனா ஓரளவுக்கு அவங்க நினைச்ச மாதிரி வந்திருந்தேன்.
நான் நடிச்ச நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை அம்மாவோடு நான் தியேட்டரில் போய் பார்த்தேன். அம்மா என்னுடைய இண்ட்ரொடக்ஷனை பார்த்ததுமே எழுந்து நின்று கண்கலங்கிய படியே கைதட்டி இருந்தார். அது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்தது. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கும்... நான் பார்த்து வளர்ந்து வந்த விதம் வேற மாதிரி இருக்கும்.
நீங்கள் பார்க்கும் பிரச்சினை வேற மாதிரி இருக்கும். ஆனால் பிரச்சனை இல்லை என்று சொல்ல முடியாது. எனக்கு என்னுடைய பிரச்சனை பெரியது, உங்களுக்கு உங்களுடைய பிரச்சனை பெரியது. அதற்காக அடுத்தவர்களை மட்டம் தட்டவோ தரை குறைவாகவோ பேசவே கூடாது என்று உருக்கமாக பவித்ரா லட்சுமி பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications