ஆளே அடையாளம் தெரியாமல் பவித்ரா லட்சுமியா இது? எலும்பும் தோலுமா உருக்குலைந்த உடம்பு! ஸ்டன் ஆன ஃபேன்ஸ்
சென்னை: சின்னத்திரை மட்டுமல்லாமல், சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நடிகை பவித்ரா லட்சுமி.. ஆனால், இவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிகிறது.. அதேசமயம், இவரது உடல்நிலையில் திடீரென மாற்றம் தென்பட்டுள்ளது.. என்ன காரணம் என்பது குறித்து பவித்ராவே தற்போது விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
பவித்ரா லட்சுமி கோவையை சேர்ந்த அக்மார்க் தமிழ்ப்பெண் ஆவார்.. தந்தையை சிறுவயதில் இழந்து, கடந்த வருடம் தாயையும் இழந்தவர்.

ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக மாடலிங்கில் ஈடுபட்டு வந்தபோதே, பல்வேறு அழகு போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் பவித்ரா.. அந்தவகையில் கடந்த 2016ல், மெட்ராஸ் ராணி என்ற டைட்டிலும் வென்றிருக்கிறார்..
சினிமாவில் என்ட்ரி
பிறகு சின்னத்திரைக்குள் நுழைந்து, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.. அடுத்ததாக, நடிப்பிலும் ஆர்வம் கொண்டு, சினிமாவில் நுழைந்தார்.. டைம் என்ன பாஸ் என்ற படத்தின் மூலம் என்ட்ரி தந்தார்.. பிறகு 'நாய் சேகர்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். மற்றொருபுறம் குறும்படங்களிலும் நடிக்க துவங்கினார்.. இதனால், குறுகிய காலத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பால், இளைய தலைமுறையை ஈர்த்தார்..
இவருக்கு கிடைத்த இந்த புகழை பார்த்துதான், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தேர்வானார்.. அந்த நிகழ்ச்சியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்..
கையில் குழந்தையுடன்
கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரியாஸ் என்பவரின் குழந்தையை, பவித்ரா கையில் ஏந்தியவாறு இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. நடிகர் ரியாசுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்ததால், குழந்தைகளை பார்க்க மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போதுதான், குழந்தையை தூக்கி கொஞ்சியபோது, போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த போட்டோவில் பவித்ராவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..
காரணம், பழைய முகம் பவித்ராவுக்கு இல்லை.. உடல் எடை குறைந்து இருந்ததுடன், பார்க்கவே எலும்பும் தோலுமாக காணப்பட்டார்.. பிறகு பவித்ரா தன்னுடைய முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும், அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின.. ஆனால், இதனை பவித்ரா லட்சுமி உடனடியாக மறுத்திருந்தார்.
உடல்நிலை என்ன பிரச்சனை
அப்படியானால், உடல்நிலையில் பிரச்சனையா? டயட்டா? எதுவானாலும் பவித்ரா உடம்பை பார்த்துக்குங்க என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டனர். எனினும் அவருடைய பழைய முகம் திரும்பவில்லை என்பதால், என்னதான் ஆச்சு பவித்ரா? என்று கேள்விகளை கேட்டபடி உள்ளனர்.. மேலும் சிலர், பவித்ராவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பவித்ரா லட்சுமி தன்னுடைய உடல்நிலை குறித்து தற்போது பேசியிருக்கிறார்.. அதில், "எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மெலிந்து போய்விட்டேன்.. தற்போது சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன்.. தன்னைப் பற்றி தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம்.. தனக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்..
இப்போது மீண்டும் உடல்நலம் தேறி வருகிறேன்.. உடலில் சதை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வருகிறது. விரைவில் மீண்டு வந்துவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications