கணவரிடம் முழு அன்பை எதிர்பார்த்தேன்.. போனில் கேட்ட 3 வார்த்தை! பார்த்திபன் பிரிவு குறித்து சீதா ஓபன்
சென்னை: நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சீதா அவரை எதற்காக பிரிந்தார் என்று சில மாதங்களுக்கு முன்பு சீதா பேசிய பேட்டி இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர் பார்த்திபன் தொடர்ச்சியாக சில தினங்களாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சீதாவின் பழைய பேட்டியை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சினிமா துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு துறையாக இருந்தாலும் சரி அதில் ஒன்றாக வேலை பார்க்கும் பொழுது பலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். தங்களுடைய துறையில் இருப்பவர்களை திருமணம் செய்து கொண்டால் தங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள் என்று பலர் நினைத்து இருந்தாலும் ஒரு சிலரால் திருமணத்திற்கு பிறகு அந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அதனாலேயே பாதியிலேயே விவாகரத்தில் முடிந்து விடுகிறது.

அதுபோலத்தான் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்து விட்டது. பார்த்திபன் ஆரம்பத்தில் கே. பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக இருந்து முதல் முறையாக புதிய பாதை திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கவும் செய்திருந்தார். அந்த நேரத்தில் சீதாவும் முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார்.
முதலில் பார்த்திபனின் புதிய பாதை திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீதா சொல்லி இருக்கிறார். ஏனென்றால் புதிய இயக்குனராக இருக்கிறார் இவருடைய படம் நமக்கு செட்டாகுமா இல்லையா என்று தெரியவில்லையே என்று மறுத்த சீதா பிறகு தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் அந்த படத்தில் நடித்து அந்த படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது பார்த்திபனோடு காதல் ஏற்பட்டு இருக்கிறது.
1990 இல் இருவரும் திருமணம் செய்து இருந்தாலும் 2001 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பார்த்திபன் டீன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது குறித்து பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் பார்த்திபன் பேசி இருக்கையில் அவருடைய முன்னாள் மனைவி சீதா குறித்தும் பேசி இருக்கிறார்.
அதில் பார்த்திபன் பேசுதையில், நான் திருமண வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுத்து விட்டேன். திருமணத்திற்கு முன்பு சீதாவை அதிகமாக காதலித்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருடைய கனவுகளுக்கு தடையாக இருந்தேன். திருமணத்திற்கு முன்பு சீதா என்னை கல்யாணம் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை பெரிய நடிகையாக வரவேண்டும் என்று நினைத்தேன்.
அந்த நேரத்தில் சீதா நடித்தது போதும் இதோடு முடித்துக் கொள்கிறேன் என்று சொன்னதால்தான் திருமணத்திற்கு சம்மதித்தேன். திருமணம் முடிந்ததும் கொஞ்ச நாளிலே சீதா மீண்டும் நடிக்கிறேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் சீதா நடித்தால் குடும்பம் உடைந்து விடும் என்று நினைத்து நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போ இருக்கிற மெச்சூரிட்டி அந்த நேரத்தில் இருந்திருந்தால் தாராளமாக போய் உன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல்லி இருப்பேன்.
ஆனால் அப்போ நான் செய்த தப்புதான் இப்போ பிரச்சனையா இருக்கு என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சீதா பேசிய பேட்டியை ரசிகர்கள் இப்போது பகிர்ந்து வருகிறார்கள். அதில் சீதா பேசுகையில் நான் புதிய பாதை படத்தில் நடிக்கும் போது பார்த்திபனை காதலிக்க தொடங்கினேன். ஆனால் அந்த நேரத்தில் இருவர் மனதிலும் காதல் இருந்தது.
ஆனால் நான் முதலில் அவரிடம் காதலை சொல்லவில்லை. அவர்தான் எனக்கு போன் பண்ணி தினமும் அந்த மூன்று வார்த்தையை சொல்லுங்க என்று சொல்லுவார். நான் அதை இரண்டு மூன்று வாரங்களுக்கு சொல்லவில்லை. ஒருநாள் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன். அந்த நேரத்தில் நான் மாடியில் இருந்து போனில் பேசுவதை என்னுடைய அப்பா கீழே ஹாலில் இருக்கும் போனில் கேட்டு விட்டார்.
நான் என்னுடைய காதலை பார்த்திபனிடம் சொல்லிய முதல் நாளே பிரச்சனை தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. அதற்கு பிறகு தான் எங்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நான் பார்த்திபனிடம் அதிகமாக எதிர்பார்த்தேன் அதனால் எங்களுக்கு பிரிந்து வந்தது என்று அவர் சொல்லி இருக்கிறார். அது உண்மைதான் நான் சாதாரணமாக ஒரு பெண் என்ன ஆசைப்படுவாரோ அதுபோல ஆசைப்படேன்.
என்னுடைய கணவர் எனக்கு மட்டும் இருக்க வேண்டும். என்னுடைய கனவுகளுக்கு துணையாக இருக்க வேண்டும் நான் இண்டிபெண்டெண்டா முடிவெடுப்பதற்கு அவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். அதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன் பொதுவாக நான் இல்லை எந்த பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் செய்து கொண்டால் சுயமாக நம்முடைய சம்பாத்தியம் இருக்க வேண்டும்.
எல்லா கணவன்மார்களும் வீட்டிலேயே தனக்காக காத்திருக்கும் மனைவிகளை விரும்புவதை விடவும் வெளியே போயிட்டு சாயங்காலம் தன்னை போலவே வீட்டிற்கு வரும் மனைவியை தான் அதிகமானோர் விரும்புகிறார்கள் என்று அந்த பேட்டியில் சீதா பேசியிருக்கிறார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications