வாழ்க்கை துணை முக்கியம்.. விஜே பிரியங்கா என்னிடம் திருமணம் பற்றி கேட்ட காரணமே இதுதான்.. வனிதா ஓபன்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விஜே பிரியங்கா, வனிதாவிடம் "அக்கா கல்யாண சாப்பாடு எப்போ போட போற" என்று கேட்டிருந்தார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இது பற்றி வனிதா விஜயகுமார் சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் குடும்ப வாழ்க்கை திறந்த புத்தகமாக தான் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அதை அவருடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலையில் அதை வைத்து அவரை பலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் தன்னை பற்றி வரும் விமர்சனங்களை வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் இருந்தே கண்டு கொண்டது கிடையாது. ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் 18 வயதிலேயே ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டார்.

அதற்குப் பிறகு ஒரு மகன் பிறந்தார். ஆனால் முதல் திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்த வகையில் இல்லை என்று விவாகரத்து செய்துவிட்டு அடுத்த சில வருடங்களில் இரண்டாவது திருமணம் செய்திருந்தார். அதிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த வாழ்க்கையில் இருந்தும் வனிதா விலகி இருக்கிறார். பிறகு மூன்றாவது ஒரு திருமணம் செய்திருந்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்து விட்டது இந்த நிலையில் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்.
இதில் மகன் விஜய் ஸ்ரீஹரி அவருடைய முதல் கணவர் ஆகாஷ் உடன் இருக்கிறார். அதற்கு பிறகு அவருடைய இரண்டு மகள்களில் ஒருவர் அவருடைய தந்தையோடு இருக்கிறார். இப்போது வனிதா உடன் அவருடைய மகள் ஜோவிகா மட்டுமே இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்ய போவதாக அறிவித்து மோதிரம் மாற்றி சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
தன்னுடைய மகள்கள் முன்பு தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்று சில பேட்டிகளிலும் பேசி இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் பீட்டர் பாலுடன் திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே அவரை விட்டுப் பிரிந்து விட்டதாக வனிதா அறிவித்திருந்தார். அதற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் இறந்தும் போய்விட்டார். அப்போது வனிதா நான் பீட்டர் பாலை முறைப்படி திருமணம் செய்யவில்லை என்று அறிவுத்திருந்தார்.
இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது அதில் சிறப்பு விருந்தினராக வனிதாவும் கலந்து கொண்டிருந்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விஜே பிரியங்கா வனிதாவை பார்த்து அக்கா அடுத்த கல்யாண சாப்பாடு எப்ப போட போற என்று கேட்டதால் வனிதா எதுவும் பேச முடியாமல் வாயை மூடி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது வனிதாவிடம் இது பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் பலர் அடுத்த கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்களே அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, அதற்கு அவங்க கேட்பதில் எந்த தப்பும் கிடையாது. அதுவும் நீங்கள் யாரை சொல்றீங்கன்னு எனக்கு தெரியும் நீங்க விஜே பிரியங்காவை தான் சொல்றீங்க.
பிரியங்கா என்னுடைய தங்கச்சி போல தான். அவளுக்கு என்னுடைய வாழ்க்கையில் அக்கறை இருக்கிறது. பொதுவாக ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி வாழ்க்கை துணை என்பது ரொம்பவும் முக்கியம். நம்முடைய சந்தோச துக்கங்களை நாம் அவர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அது நமக்கு சரியாக அமையாத நேரத்தில் தான் நாம் அதில் இருந்து விலகுகிறோம்.
அதற்காக அடுத்து ஒரு வாழ்க்கை தேடக்கூடாது என்று இல்லை. பிரியங்காவிற்கு என்னைப் பற்றி தெரியும். அவளை பற்றி எனக்கு தெரியும் அதனால் தான் அவள் என்னிடம் கல்யாணம் பற்றி கேட்டாள் வேறு ஒரு விஷயமும் கிடையாது, என்று வனிதா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications