என் மகன் என்னோடு பேசாத காரணமே இதுதான்! மெசேஜ் செய்தேன்.. ஆனால்! வெளிப்படையாக பேசிய வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மகன் குறித்து வனிதா சமீபத்தில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய மகன் தன்னை பிரிந்து இருக்கும் நிலையில் அவர் எதற்காக இப்போது என்னிடம் பேசாமல் தவிர்க்கிறார் என்பது பற்றி வனிதா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா. இவர் முதல் முறையாக சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படமே விஜய்யோடு கதாநாயகி ஆகத்தான் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ராஜ்கிரணுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஒரு சில திரைப்படங்களில் அந்த நேரத்தில் வனிதா நடித்துக் கொண்டிருந்தாலும் ஆகாஷ் என்பவரோடு அவருக்கு திருமணம் நடைபெற்றது.

வனிதா ஆகாஷை திருமணம் செய்யும்போது அவருக்கு 18 வயது என்று பல இன்டர்வியூகளில் சொல்லியிருக்கிறார் 19 வயதில் தனக்கு ஒரு மகன் பிறந்து விட்டான் என்றும் ஆனால் அந்த திருமண வாழ்க்கை என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிந்து விட்டோம். அது புரியாத வயதில் நடந்த திருமணம் என்று நான் அதைப்பற்றி வருத்தப்பட போவதில்லை காரணம் அந்த திருமணத்தால் தான் எனக்கு ஒரு மகன் கிடைத்தான்.
என்னுடைய மகன் இப்போது கதாநாயகனாக நடிக்கிறார். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் என்னுடைய மகன் என் மீது அதிகமாக பாசமாக இருந்தான். ஆனால் அதற்குப் பிறகு அவன் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டான். இப்போது கூட அவன் என்னோடு பேசாமல் இருப்பதற்கு காரணம் நாம் ஆரம்பத்தில் அம்மாவுக்கு எதிராக பேசிவிட்டோமே இப்போ பேசினால் சரியா வராது என்று நினைத்துதான் அவன் அமைதியாக இருக்கிறான்.

மத்தபடி அவன் என் மீது கோபத்தில் இருக்கிறான் என்று நான் சொல்ல மாட்டேன். நான் இப்போதும் என்னுடைய மகனோடு மட்டும்தான் பேசவில்லை. மற்றபடி அவனுடைய தந்தையின் குடும்பத்தினரிடம் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் படம் நடிக்கிறான் என்றபோது நான் அவனுடைய தந்தைக்கு மெசேஜ் செய்தேன். அந்தப் பக்கம் எல்லோரும் என்னிடம் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு தான் ஒரு வருத்தம் இருக்கிறது. ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும் போது நாம் அம்மாவுக்கு எதிராக பேசி விட்டோம் என்று ஃபீல் பண்ணுகிறான். ஒருநாள் என்னை கண்டிப்பாக புரிந்து கொள்வான். நானும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன், இப்போது என்னுடைய மகனும் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது எனக்கு பெரிய சந்தோஷம்தான்.
இது சினிமா தறையில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் என்று கூட நான் சொல்வேன். என்னுடைய மகன் நடிக்கப் போகிறான் என்று செய்தி கேட்டதும் ஜோவிகா ரொம்பவே சந்தோஷப்பட்டா. ஜோவிகாவிற்கு எப்போதும் விஜய் ஸ்ரீஹரி மீது அதிகமான பாசம் உண்டு என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications