40 வருஷம் கழிச்சு தெரிந்து கொண்ட உறவு.. வனிதா பிரபல நடிகை பற்றி பகிர்ந்த தகவல்.. என்ன ஒரு விளக்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரை பற்றி பல தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகை விமலா ராமனுக்கும் தனக்கும் உள்ள குடும்ப உறவைப் பற்றி இவர் தெரிந்து கொண்ட விதத்தைப் பற்றியும் நெகிழ்ச்சியாக ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் படத்தில் அறிமுகம்
நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்த வனிதா அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இளம் கதாநாயகன்களோடு மட்டுமல்லாமல் ராஜ்கிரண் போன்ற முன்னணி நடிகர்களோடும் இவர் திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு சில காலங்கள் திரைத்துறையில் தலை காட்டாமல் இருந்த நிலையில் இவருடைய குடும்பப் பிரச்சனைகள் சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்த விஷயமாக தான் இருந்து வருகிறது. இவருடைய பர்சனல் வாழ்க்கை கூட சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்த புத்தகமாக இருந்து வருவதாகவே ரசிகர்கள் இவரை குறித்து குறிப்பிட்டு வருகிறார்கள்.

பிக் பாஸ் பிரபலம்
வனிதா என்ன செய்தாலும் அதை சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்து விடும். திரைப்படங்களில் நடித்தாலும் சரி அல்லது இவருடைய சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் தெரிந்ததாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்த வனிதா விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார். அதுவும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது இவரை போலீஸ் கைது செய்ய வந்தது போன்ற செயல்களால் இவர் சமூக வலைத்தளத்தில் கண்டன்ட் கொடுக்கும் ஒரு நபராக மாறி இருந்தார்.

இப்போ தான் தெரிந்தது
தற்போது இவர் நடிகையாகவும், சின்னத்திரை பிரபலமாகவும், யூடியூபில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்தும் வருகிறார். அது மட்டுமல்லாமல் ஒரு டிசைனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நகைச்சுவை நிகழ்ச்சியின்களில் ஜட்ஜ் ஆகவும் இருந்த இவர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று டான்ஸ் ஆடி இருந்தார். தற்போது சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு பிரபலமான நடிகையோடு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு இருக்கிறார்.அதில் பிரபல நடிகை விமலா ராமன் தன்னுடைய உறவினர் என்பதை தான் 40 வருடங்கள் கழித்து தனக்கே தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியின் கொள்ளு பேத்திகள்
தமிழ், தெலுங்கு நடிகையாக இருந்து வரும் விமலா ராமன் வனிதாவின் உறவினராம். அதாவது தனது அம்மாவழி உறவினர் என்றும் விமலா ராமன் தனது கசின் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இருவருமே நீதிபதி முத்துசாமி ஐயரின் கொள்ளுப்பேத்தி என வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார். நடிகை விமலா ராமன் தமிழில் ராமன் தேடிய சீதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் பதிவு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு, கருத்து தெரிவித்து பட்டு வருகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications