Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்துக்குமே”.. நடிகர் விஜய்யை சந்தித்ததும் அப்பா SAC உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் சில மாதங்களாக தன்னுடைய உடல்நிலை சரியில்லை என்றும் தான் பரிசோதனை செய்ததில் டாக்டர் என்ன சொன்னார் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

After actor Vijay came to meet him, his father, director SA Chandrasekhar released a warm post

அதைத்தொடர்ந்து அவருடைய மகனான நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்து இருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் மீண்டும் தன்னுடைய மகன் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஸ் வி சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றவர். இப்போது நடிகராகவும் களமிறங்கி கொண்டிருக்கிறார். வெள்ளி திரையில் பல வருடங்களாக சிறப்பாக பல திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த எஸ்ஏ சந்திரசேகர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் எஸ் சி சந்திரசேகர் நடிகர் விஜய்யின் அப்பா என்பது சின்ன குழந்தைகள் வரைக்கும் தெரியும். அது போல இவர்கள் இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு பிரச்சனைகளும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் பரீட்சையமானது தான். எஸ் ஏ சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தின் மூலமாக தான் இயக்குனராக அறிமுகமாகி, தான் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் தன்னுடைய மகன் விஜய்யை அறிமுகம் செய்தார்.

After actor Vijay came to meet him, his father, director SA Chandrasekhar released a warm post

அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியும் இருந்தார். இந்த நிலையில் தான் விஜய் டிவி தான் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியல் கதாநாயகியின் அப்பா கேரக்டரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அனைவருக்கும் வணக்கம். நான் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகிறேன். நம்ம வாழ்க்கையில் அப்பப்போ சில இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் மறக்க முடியாத சம்பவங்கள் எல்லாம் நடக்கும். அதுபோல சமீப காலமாக எனக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் எப்போதும் ரொம்ப ஆக்டிவான எனர்ஜியான பர்சன் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் கடந்த இரண்டு மூணு மாதங்களாகவே எனக்கு ஒரு மாதிரி ஆகவே ரொம்ப எனர்ஜி குறைவா இருந்த மாதிரியே எனக்கு ஒரு பீலிங் இருந்துச்சு. அதனால நான் டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். அவர் ஸ்கேன் எடுக்கணும்னு சொன்னார். உடனே நாங்களும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தோம்.

அப்போ டாக்டர்கள் ஒரு பிரச்சனை இருக்கிறதை கண்டுபிடிச்சு சொன்னாங்க. அதுவும் உடனே சர்ஜரி பண்ணனும் அப்புறமா ரெண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னாங்க அதுபோல நானும் பண்ணினேன். நேற்றைக்கு சர்ஜரி முடிஞ்சு. இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிட்டேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்சனை வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருக்க வேண்டும்.

After actor Vijay came to meet him, his father, director SA Chandrasekhar released a warm post

அய்யய்யோ எனக்கு பிரச்சனை வந்துவிட்டதே என்று நாம நினைத்துக் கொண்டிருந்தால் டிப்ரஷனுக்குள் ஆளாகி விடுவோம். எனக்கு சர்ஜரி பண்ணனும் என்று சொன்னதும் நான் நமக்கு ஏதோ நடக்கிறது என்று தெரிஞ்சுவிட்டது. நான் அதை ஏற்றுக் கொண்டேன். அதுபோல டாக்டர்ஸ் ஸ்கேன் எடுக்கணும் என்று சொன்னார்கள். நான் எடுத்துக் கொடுத்ததும் என்ன பிரச்சனை என்பதே உடனே கண்டுபிடித்துவிட்டார். அது ரொம்ப நல்ல விஷயம். சில டாக்டர்கள் அந்த மாதிரி சீக்கிரமா பிரச்சனையை கண்டுபிடிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

ஆனால் எனக்கு கிடைத்த டாக்டர் உடனே பிரச்சனையை கண்டுபிடித்து சர்ஜரி செய்து விட்டார். இது நல்ல விஷயம் தான் என்று நம்முடைய மனதை நாம் எல்லா விஷயங்களை நல்லது என்று ஏற்றுக் கொண்டால் நம்முடைய மனது பாசிட்டிவாக இருக்கும் என்று பலருக்கும் அட்வைஸ் கொடுக்கும் விதமாக இந்த ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அப்பாவை பார்க்க போகவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய் அங்கிருந்து நேராக தன்னுடைய தந்தையை வந்து சந்தித்திருக்கிறார். அப்போது சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு தன் அம்மா அப்பாவோடு விஜய் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து," பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்துக்கே வலிமை கூடுகிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+