கணவர் கூறிய அந்த வார்த்தை... பிக் பாஸ்க்கு பிறகு நெகிழ்ச்சியாக நன்றி கூறி ரச்சிதா வெளியிட்ட பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரச்சிதா முதல் முறையாக தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் இது இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான பதில் தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முயற்சிக்கு கிடைத்த வாய்ப்பு
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி பல வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய கணவரும் ரச்சிதாவிற்கு முதல் நாளில் இருந்து ஆதரவு கொடுத்து ரசிகர்களின் மத்தியில் வாக்கு செலுத்த சொல்லி கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே ரச்சிதா அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தார்.

எதிர்பார்க்காத காதல் திருமணம்
ரச்சிதா முதல் முதலாக தமிழில் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அவரோடு ஜோடியாக நடித்த தினேஷ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதல் சீரியல் முடிவடைந்ததும் இவர்களுடைய திருமணம் நடைபெற்றதும் சின்ன திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காரணம் அதே நேரத்தில் ரச்சிதா பாப்புலராக சீரியல்களில் நடிக்க தொடங்கி இருந்த நேரத்தில் அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார் என்று அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணி வந்தனர். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் மட்டும் குவிந்து வந்தது. ரச்சிதாவின் திருமணத்தில் சின்னத்திரை ரசிகர்கள் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

சின்ன பிரச்சனை தானாம்
என்னதான் இவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் தினேஷ் ரச்சிதாவிற்கு ஆதரவாகவே ஒவ்வொரு முறையும் பேசி வந்தார். அதுமட்டுமல்லாமல் எங்கள் இருவருக்கும் இருப்பது சிறு பிரச்சனை தான். அதை நாங்கள் இருவருமே பேசி தீர்த்துக்கொள்ளும்படிதான் இருக்கிறது. மனம் விட்டு பேசினாலே போதும் நான் சில நேரங்களில் எடுத்த தவறான முடிவு மற்றும் செயலால் காரணமாகத்தான் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. ரச்சிதா வேற சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட நான் அவரை பார்ப்பதற்காக அந்த இடத்திற்கு சென்று இருக்கிறேன் நாங்கள் பேசவில்லை என்றாலும் அவர் இருக்கும் இடத்திற்கு தெரிந்து கொண்டு நான் ஒவ்வொரு முறையும் போய் பார்த்து இருக்கிறேன் ஆனால் இப்போது ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று தினேஷ் கூறியிருந்தார்.

தினேஷ் கூறிய வார்த்தை
ரச்சிதாவை 24 மணி நேரமும் தன்னால் இப்போது பார்க்க முடியும் அதற்காகவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இதற்கு முன்பு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்று தினேஷ் கூறியிருந்தார். தற்போது 91 வது நாளில் ரச்சிதா வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் இவர் வெளியேறியது இவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது அவரை குறித்து தற்போது சமூக வலைதளத்தில் பல ட்ரெண்டிங் ஹேஷ்டேக் வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரச்சிதாவின் வெளியேத்திற்கு பிறகு தினேஷ் எப்போதும் போல ரச்சிதாவிற்கு தான் ரசிகர்களாகவும் ஆதரவாளர்களாகவும் நாங்கள் உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம். உண்மையில் நீங்கள் பல இதயங்களை வென்றிருக்கிறீர்கள் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார்.

இது யாருக்கான பதில்
அதைத்தொடர்ந்து ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பயணத்தில் நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்து இருக்க முடியாது. உங்கள் அனைவரின் எல்லை இல்லா அன்பிற்கு நான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன் இருக்கிறேன் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இது தினேஷ் வெளியிட்ட பதிவுக்கு எதிர் பதிவு தானா அல்லது ரசிகர்களுக்கு நன்றி கூறும் பதிவு தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்கள் அதிகமானோர் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் மனம் விட்டு பேசி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர். சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியாக இருக்கும் இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் ரசிகர்கள் பலருடைய விருப்பமாக இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications