அழுகையை தொடங்கிய அக்ஷரா...காரணம் சிபி செய்த செயல் தானா??
சென்னை: தலைவர் பதவியில் சிபி செய்த செயலைப் பார்த்து அக்ஷரா அழுகையை தொடங்கிவிட்டார்.
பொம்மையின் தலையை உடைத்ததற்கு இவ்வளவு அளப்பறையா??என்று நெட்டிசன்கள் அக்ஷராவை கலாய்த்து வருகின்றனர்.
மனதில் ஏதோ வைத்துக்கொண்டுதான் சிபி இந்தமாதிரி செய்துவிட்டார் என்று அக்ஷரா குற்றசாட்டுகளை குவித்து வருகிறார்.

தலைவர் பதவிக்கான முதல் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதுபுது பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் முளைத்துக் கொண்டு இருக்கிறது. அதில் இந்த வார தலைவருக்கு போன வாரத்தில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக சேர்ந்து செண்பகமே செணபகமே என்று புதுவிதமான டாஸ்க் விளையாடி அதில் ஒரு அணியினர் அதுவும் ப்ளூ அணியனர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ப்ளூ அணியினர் நேரிடையாக இந்த வார தலைவர் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று பிக்பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சோளக்காட்டு பொம்மை
இந்த வார தலைவர் போட்டியில் அக்ஷரா, பிரியங்கா, பாவனி, அபினவ், நிரூப் மற்றும் வருண் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இவர்கள் ஆறு பேருக்கும் சோளக்காட்டு பொம்மை வைத்து அதில் போட்டியாளர்களின் பெயரை எழுதி வைத்து, ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய முகங்களை அந்த பொம்மையில் ஒட்டி வைத்திருக்கின்றனர். அதில் இந்த வாரம் யார் தலைவராக இருக்க வேண்டாம் என்று சக போட்டியாளர்கள் நினைக்கிறார்களோ அவர்கள் அந்த போட்டியாளர்களின் பெயர் வைத்த பொம்மையின் தலையை உடைத்து தங்களுடைய விருப்பங்களை கூறலாம் என்று வித்தியாசமான டாஸ்க் வைத்திருக்கிறது பிக் பாஸ்.

தொடரும் அழுகாச்சிகள்
ஒவ்வொரு டாஸ்க் வரும்போதும் யாராவது அழுகை காட்சிகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதில் அதிகமாக அக்ஷரா இடம்பிடித்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கும் போது இந்த வாரத்திலும் இவர் செய்த செயல் அனைவரையும் சலிப்படைய செய்திருக்கிறது. போட்டியில் தான் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று சக போட்டியாளர்களுக்கு, எல்லார்கிட்டயும் ஒரு ஆப்பர்சூனிட்டி இருக்கு என்கிட்ட அது இல்ல...என்று தன்னுடைய நிலையை விளக்கிக் கூறிக் கொண்டிருக்கிறார்.

சல்லி சல்லியா உடைஞ்சு போச்சு
அக்ஷராவின் கதையை கேட்டு முடித்ததும் உடனே சிபி தன்னுடைய கையில் இருக்கும் கம்பால் அக்ஷராவின் பொம்மை தலையை உடைத்துவிட்டார். இதனால் அக்ஷராவின் மனது சல்லி சல்லியாக நொறுங்கி போய் விட்டது. அதனால் எடுத்ததும் எனக்கு ஆப்பர்சூனிட்டி இல்லை. அதனால் என்னை முடித்துவிடவேண்டும் என்று சிபி இப்படி செய்து விட்டார். எதையுமே மனதில் வைத்திருக்க முடியவில்லை என்றால் என்னிடம் இருந்து தூர விலகி இருக்க வேண்டும் என்று இவர் கண்ணீரோடு பேசியதை பார்த்து இவருடைய ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கும்போது, நெட்டிசன்கள் இந்த வாரம் அழுகாச்சி சீன்கள் தொடங்கி விட்டதா??என்று வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications