போராடி வெற்றி பெற்ற அண்ணாச்சி...கடைசியில் பல்பு கொடுத்த நிரூப்
சென்னை:'கோபுரங்கள் சாய்வதில்லை' டாஸ்கில்.. அண்ணாச்சியின் ஆசையை சாய்த்த.. நிரூப்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வழக்கம் போல் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை 'கோபுரங்கள் சாய்வதில்லை' டாஸ்க் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் நிர்ணயித்திருக்கிறார்.
அதன்படி காலி பாக்ஸ்களை கோபுரம் போல் அடுக்கிகொண்டே...செல்ல வேண்டும். முடிவில் யார் அடுக்கிய கோபுரம் பெரிதாக இருக்கிறதோ.. அவரே இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர்.. இதுதான் டாஸ்க்.

வில்லங்கமான விதிமுறை
தலைவருக்கு போட்டியிடுபவர்கள் கோபுரங்களை அடுக்கும் பொழுது ஹவுஸ் மேட்கள் அவர்களை தொட மட்டும் கூடாது மற்றபடி அவர்களை அடுக்க விடாமல் தொந்தரவு செய்ய வேண்டும் என்று வில்லங்கமான விதிமுறைகளையும் பிக் பாஸ் கொடுத்துள்ளார்.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவருக்கான கனவில், போட்டியில் இமான் அண்ணாச்சி, சிபி, அபிஷேக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

பேசினால் செல்ப் எடுக்காது
ஹவுஸ் மேட்களும் தங்களால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு இடைஞ்சல்கள் கொடுத்தும், ஓரளவு சிறப்பாகவே ஒவ்வொருவரும் தங்களுக்கான கோபுரங்களை எழுப்பி வந்தனர். போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுதே பேசியே பிரபலமான இமான் அண்ணாச்சி 'பேசினால் செல்ப் எடுக்காது' என்று சொன்னதுதான் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. டாஸ்கின் முடிவில் இமான் அண்ணாச்சியின் கோபுரங்கள் பெரிதாக இருந்ததால் அவரே வெற்றியாளராக முடிவு செய்யப்பட்டது.ஆனால் அதன் பிறகுதான் பிக்பாஸ் போட்டியில் ஒரு பெரிய டுவிஸ்ட் வைத்தார்.

அண்ணாச்சியின் கோரிக்கை
போட்டியின் போதே தான் இதுவரை பிக்பாஸ் வீட்டில் தலைவராக இருந்தது இல்லை எனவும், இந்த வாரம் தான் தலைவராக இருக்க ஆசைப்படுவதாகவும் இமான் அண்ணாச்சி கோரிக்கை வைத்தார். ஆனால் பிக் பாஸ் அவரது ஆசைக்கு ஆப்பு வைப்பது போல், போட்டியின் முடிவை மாற்றும் அதிகாரத்தை காயின் பவரை பயன்படுத்தி செய்யலாமென்று ஆப்சன் கொடுக்கிறார். இதற்காகவே காத்திருந்தது போல் உடனே அதை ஏற்றுக் கொண்ட நீருப் காயின் பவரை பயன்படுத்தி இமான் அண்ணாச்சியின் தலைவர் கனவை தகர்த்தது போல் இருக்கிறது.இமான் அண்ணாச்சியும் தன்னைப் பார்த்து நீருப் பயந்து விட்டதாக கூறி அவரை அவரே சமாதானப் படுத்திக் கொள்கிறார்.

சாதுர்யமான கேம்
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே விளையாட்டை சரியாக ஆடி வரும் போட்டியாளராக நீருப், இமான் அண்ணாச்சியும் இருந்து வருகின்றனர் .இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள்..!? எப்படி செய்கிறார்கள்..!? என்று சக போட்டியாளர்களே கணிக்க முடியாத அளவிற்கு சாதுர்யமாக கேமை நகர்த்தி வருகின்றனர். அண்ணாச்சியின் தலைவர் கனவை தகர்த்ததன்மூலம் அண்ணாச்சியின் ஹிட் லிஸ்டில் நீருப் கண்டிப்பாக இணைந்து இருப்பார்.இனி நீருப்- இமான் அண்ணாச்சி இந்த இரு திறமையான போட்டியாளர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications