இது ஒரு கேவலமான எண்ணம்... அபிஷேக் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி
சென்னை: பாப்புலர் ஆக வேண்டும் என்பதற்காக அபிஷேக் செய்யும் செயல் கேவலமாக இருக்கிறது என்று அண்ணாச்சி கோபத்தோடு கூறியிருக்கிறார்.
ரசிகர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்று தற்போது அபிஷேக் செயல்களைப் பார்த்து பலர் காண்டாகி கூறிவருகின்றனர்.
கண்டெண்ட்க்காக ஒவ்வொரு ப்ரமோவிலும் இப்படியா சண்டை போடுவது போல காட்டுவார்கள் என்று பிக்பாஸ் எடிட்டர் டீமை நெட்டிசன்கள் ஒருபக்கம் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மூன்றாவது வாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் 2 வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் விரு விருப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் இந்த வீட்டில் இருந்த கலகலப்பு சத்தம் இப்போது சண்டை சச்சரவாக மாறியிருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சுய கேரக்டரை காட்ட தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று தங்களுடைய திறமைகளை காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அபிஷேக் செய்யும் செயல்தான் நெட்டிசன்கள் மத்தியிலும் பிக்பாஸ் ரசிகர்களின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதையும் கண்டுக்குற ஆள் இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே கேமரா தன்னை கவர் செய்ய வேண்டும் என்பதற்காக பிளான் பண்ணி அபிஷேக் ஒவ்வொரு செயல்களாக செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் இவர்மீது குற்றம் சாட்டி கொண்டிரக்கின்றனர். ஆனால்
நான் அதற்கெல்லாம் சளைத்தவரல்ல என்று இவர் தினமும் செய்யும் செயல்கள் வேற லெவல் இருந்து வருகிறது. ஒருபுறம் நெட்டிசன்கள் இவரை கலாய்தாலும் சக போட்டியாளர்கள் இவருக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது அங்கேயும் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

வைரலாகும் பழைய வீடியோ
நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து இவரிடம் கவனமாக தான் சக போட்டியாளர்கள் விளையாண்டு வருகின்றனர். இவருடைய ஸ்சாட்டர்ஜி பல போட்டியாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இதற்கு முன்பு இவர் பேசிய வீடியோக்களும் ஏற்கனவே பலர் பார்த்து இருந்தாலும் தற்போது அதிகமாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இதுவும் இவர்மீது பலருக்கும் வெறுப்பு வர காரணமாக இருந்து வருகிறது.

வெளிப்படையான பேச்சு
தற்போது ஒரு சில நாட்களாகவே ப்ரமோவில் அபிஷேக் முகமும் அவர் செய்யும் செயல்களும் தான் வந்து கொண்டிருக்கிறது. இது பலருக்கும் எரிச்சலாக இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு அபிஷேக் ஆமாம் ப்ரமோவில் வர வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டதும் அண்ணாச்சி, இந்த எண்ணம் கேவலமாக இருக்கிறது என்று முகத்துக்கு நேரே பட்டென்று பேசிவிட்டார். இதை பார்த்ததும் இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல அபிஷேக் நடந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அண்ணாச்சிக்கு ஆதரவாகவும், அபிஷேக்கை மேலும் திட்டி வருகின்றனர்.
-
“காதலரை அறிமுகப்படுத்திய அபிராமி” ஒரு வரி கேப்ஷனில் முழு காதலை சொன்ன பிக் பாஸ் நடிகை.. பிரபலங்கள் அட்வைஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications