அன்னபூரணியின் உடலில் அரசு.. 7 உசுரு போச்சே, நித்யானந்தா எங்கே? மனித கடவுளை வேரறுப்போம்: யார் பாருங்க
சென்னை: பெண் சாமியார் அன்னபூரணியின் பொய், ஏமாற்றுத்தனத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித கடவுள்களை வேரறுப்போம்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழ்வேந்தன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணியின் 3வது திருமணம் திருவண்ணாமலையில் சமீபத்தில் நடந்தது.

போஸ்டர்கள்: அன்னபூரணியை திருமணம் செய்துள்ள ரோகித், அவருடைய முன்னாள் கணவர் அரசுவின் புதிய பரிணாமம் என்று திருமணத்தில் ஒட்டப்பட்டிருந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பதும், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், அன்னபூரணி பெண் சாமியார் குறித்து, Kingwoods News யூடியூப் சேனலுக்கு வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரது சுருக்கம்தான் இது:
"அன்னபூரணி எத்தனை கல்யாணம் வேண்டுமானால் செய்யட்டும்.. அரசு விவகாரம் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்.. ஆனால், தான்தான் கடவுள் என்று சொல்லக்கூடாது.. இந்த பொருளாதார சோர்ஸ் எங்கிருந்து வந்தது? கடவுள் பெயரை சொல்லி சம்பாதிப்பதுதான்.. நாம் அனைவரும் எளிய மனிதர்கள். எந்த சின்ன துன்பம் வந்தாலும் தாங்கி கொள்ள மாட்டோம். சாமி நம்மை காப்பாத்தும் என்று நம்புகிறவர்கள். இதைதான் இதுபோன்ற சாமியார்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இன்னொரு திருமணம்: அரசு என்பவர் அன்னபூரணியின் உடம்பில் கூடு பாய்ந்திருக்கிறார்.. அரசு என் உடம்பில் இருப்பதாக அன்னப்பூரணியே சொல்கிறார்.. அப்பறம் எதுக்கு இன்னொரு திருமணம்? அரசை வைத்து இன்னொரு தெய்வீக குழந்தையை பெற்றுக் கொண்டிருக்கலாமே?
இங்கே கடவுள் இருக்கு என்பதற்கான ஆதாரமும் உண்டு.. கடவுள் இல்லை என்பற்கான ஆதாரமும் இருக்கு. ஆனால், எந்த மனிதனும் கடவுளாக முடியாது.. அன்னபூரணி சொல்லும் கடவுளுக்கான கற்பிதம் தவறானது. யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் தத்துவ ஞானியாக மாறலாமே தவிர, கடவுளாக முடியாது.
மார்க்கெட்டிங்: யார் கடவுள் என்றாலும், அங்கே போய் நிற்பதற்கு ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது.. கடவுள்களை நான் கொச்சைப்படுத்தவில்லை.. ஆனால், ஆனால், கடவுளுக்கான மார்க்கெட் மட்டும் இங்கே குறையவேயில்லை. இப்போதுதான் அன்னபூரணி வளர்ந்து வருகிறார். இப்போதைக்கு அவர் கைதாக முடியாது.. சிறிது காலத்துக்கு கவனமாகவே இருப்பார்.
நித்யானந்தாவுக்கு சொந்த ஊரான திருவண்ணாமலையிலும் ஒரு ஆசிரமம் இருக்கு.. 7 பேர் இப்போ மண்சரிவில் இறந்திருக்காங்க.. தன்னுடைய ஆசிரமம் சார்பில் உயிரிழந்த குடும்பத்துக்கு 1 லட்சம் தரலாமே? குறைந்தபட்சம் மனிதநேயம் கூட இல்லையே? கோயில் சொத்துக்கள் அனைத்துமே ஏழைகளுக்கானது என்று நினைத்தால், கோயிலில் பூட்டுக்களுக்கு அவசியமில்லை.
முகம்மது நபி: என்னை பொறுத்தவரையில் திருவள்ளுர்கூட கடவுள்தான். ஆனால், எந்த இடத்திலும் தன்னுடைய குறளை பின்பற்றும்படி சொல்லவேயில்லை.. குரான் எழுதிய முகம்மது நபி கடவுளாகத்தான் இருக்க முடியும்.. அந்த புத்தகத்தில் ஒரு மருத்துவம் உள்ளது. அதை படித்தவர்களுக்கு மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும்.
அன்பையும், நம்பிக்கையையும் போதித்த ஏசுவும் கடவுள்தான். அன்னை தெரசாவும் கடவுள்தான். ஆனால், தெரசாவே கை, கால் செயலிழந்து இறந்தாங்க.. அவ்வளவு நல்லது செய்த தெரசாவுக்கு வியாதியா? நல்லது செய்பவர்களுக்கு, நல்லதே நடக்கும் என்று சொல்வதெல்லாம் பொய்தானே? அதனால், நம்முடைய இறப்புக்கும் வியாதிக்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை.
வள்ளலார்: பயிருக்கும் உயிருண்டு என்று சொன்ன வள்ளலாரே, தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லையே.. மனிதனுக்கு மனிதன் தன்னை கடவுளாக சொல்லி கொள்பவர் நிச்சயம் நல்லவராக இருக்கவே முடியாது. எனவே, அன்னபூரணியின் பொய், ஏமாற்றுத்தனத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித கடவுள்களை வேரறுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications