• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் பிரச்சனை ...ஆனாலும் அசராத அர்ச்சனா.. தெம்பூட்டும் ரசிகர்களின் ஆதரவு!

Google Oneindia Tamil News

சென்னை : தனது தலையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் அர்ச்சனா போஸ்ட் போட்டுள்ளார்.

கட்டுப்போட்ட நிலையில் போட்டோ வெளியிட்ட அர்ச்சனாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டனர் ரசிகர்கள்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்கிறது.. குறையவில்லை.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்கிறது.. குறையவில்லை.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

தனது இக்கட்டான நிலையிலும் இப்படி பேசியிருக்கிறாரே என ஷாக்கான ரசிகர்கள் தைரியமா இருங்க அர்ச்சனாக்கா.. சூப்பரா திரும்பி வருவீங்க என்று ஆறுதலும், ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

இளமை புதுமை அர்ச்சனா

இளமை புதுமை அர்ச்சனா

தொகுப்பாளர்கள் என்று சொன்னாலே அதில் முக்கியமாக அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அர்ச்சனா தான். அவருடைய படபடப்பான பேச்சால் பல வருடமாக தொகுப்பாளராக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இவருக்கு தனி இடம் உண்டு . இவருக்கு எதிர்க்க இருந்து அவரிடம் யார் பேசினாலும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து கேள்வி கேட்பவர்களை வாயடைக்க செய்வதில் இவர் வல்லவர் .அதனாலேயே இவரை சிலருக்கு பிடிக்காமல் போனாலும் இவர் அவர்களை கண்டு கொள்வதில்லை

விஜய் டிவி

விஜய் டிவி

இவர் ஜீ தமிழில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் தொகுப்பாளராக இருந்த வரைக்கும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது .இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும் இருந்து வந்தது. ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில கலந்து கொண்டதுதான் இவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அன்பு கேங்

அன்பு கேங்

அதுவரைக்கும் இவருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடைய மனதில் பட்டதை அப்படியே பேசி விட்டு அந்த வீட்டிற்குள் தனக்கு பிடித்தவர்களிடம் அன்பாக இருந்ததை பலருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என்னை நேசிப்பவர்களுக்கு மட்டும் என்னைப் பற்றித் தெரிந்திருந்தால் போதும் அனைவருக்கும் நான் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை என கொத்தாக இருந்துவருகிறார்.

விஜய் டிவியில் தொகுப்பாளினி

விஜய் டிவியில் தொகுப்பாளினி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் .அவரும் அவருடைய மகளும் சேர்ந்து யூடியூப் சேனலில் பாத்ரூம் வீடியோ போட்டது ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது. நெட்டிசன்கள் மத்தியில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அவர்கள் கலாய்த்து வந்தாலும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கிற மாதிரி வீடியோஸ் வெளியிட்டு வருவார்.

தலையில் பிரச்சினை

தலையில் பிரச்சினை

தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர் .அதற்கு பதிலளிக்கும் விதமாக நான் எப்போதுமே எனது மனதில் பட்டதை பேசி விடுவதால் அது எனது மூளைக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் மூளைக்கு பக்கத்தில் ஒரு கட்டி வந்து இருக்கிறது. அதை ஆபரேஷன செய்து அகற்றிவிட்டு , இனியும் எனது மனதிற்கு பிடித்ததையும் மனதில் பட்டதையும் தான் பேசுவேன் என தைரியமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் ஆறுதல்

ரசிகர்கள் ஆறுதல்

இவரை திட்டிய ரசிகர்கள் கூட தற்போது இவர் இந்த மாதிரி போஸ்ட் போட்டதும் அதிர்ச்சியடைந்து உங்களுக்கு ஒன்றும் ஆகாது தைரியமாக ஆபரேஷன் செய்து விட்டு திரும்பி வருவீர்கள் என ஆறுதல் அளித்து வருகின்றனர் .இவ்வளவு பெரிய சூழ்நிலையிலும் தன்னுடைய தைரியத்தை விடாத அர்ச்சனாவுக்கு என்றுமே வெற்றிதான். சீக்கிரம் ஜம்முன்னு திரும்பி வாங்க அர்ச்சு..!

English summary
VJ Archana is unwell and her post in Instagram has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X