அய்யனார் துணை: சோழன் கையில் கிடைத்த பத்திரம்.. நிலா கொடுத்த அதிர்ச்சி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial Feb 18 Episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி பதினெட்டாம் தேதிக்கான எபிசோடில், சோழன் வீட்டு பத்திரத்தை கண்டுபிடித்து எடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடு, நடேசனின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதால் அவர் தனது மகன்களுடனும் நிலாவுடனும் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில், அந்த வீட்டை பெரியப்பாவிடம் இருந்து மீட்டுக் கொள்ள ஒரே வழி உயிலை கண்டுபிடிப்பது தான் என சோழன் முடிவு செய்கிறார். உயில் வீட்டுக்குள்ளே இருப்பதை நிலா கண்டுபிடித்ததும், இருவரும் ரிஸ்க் எடுத்து வீட்டுக்குள் ஏறி குதித்து அதை எடுக்க திட்டமிடுகிறார்கள்.

Ayyanar Thunai serial Vijay TV Serial Tamil Serial

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு

இந்த நிலையில் இன்றைய எபிசோடு (Ayyanar Thunai serial today episode) ஆரம்பத்தில், ஓட்டையை பிரித்து உள்ளே இறங்கிய சோழன், வீட்டுக்குள் முழுவதும் தேட ஆரம்பிக்கிறார். எங்கு தேடியும் உயில் கிடைக்கவில்லை என்று மேலே நின்ற நிலாவிடம் சொன்னதும், "நன்றாக தேடுங்க... இல்லன்னா நானும் உள்ளே இறங்கி வர வேண்டியதுதான்" என்று அவள் மிரட்டுகிறார்.

கையில் கிடைத்த பத்திரம்

அதன்பிறகு தூசி படிந்திருந்த டிரங்க் பெட்டியை கீழே இறக்கி தேடும் சோழனுக்கு, அவர் தேடிய உயில் கிடைத்துவிடுகிறது. இதனால் இருவரும் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். கயிற்றின் உதவியால் மேலே வந்த சோழன் அந்த உயிலை நிலாவிடம் கொடுக்க, அவர் உடனே அதை திறந்து பார்த்து படிக்கிறார்.

அந்த உயிலில் வீடு நடேசனுக்கே சொந்தம் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்ததும் நிலா நிம்மதியாகி சந்தோஷப்படுகிறார். அதன் பிறகு ஏணி வழியாக கீழே இறங்கி வெளியே போக முயற்சிக்கும் போது கேட்டை திறக்கும் சத்தம் கேட்கிறது. உடனே இருவரும் அருகில் இருந்த செடிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

ரொமான்ஸ் காட்சி

அந்த நேரத்தில் சோழனின் பெரியப்பா வீட்டுக்குள் வந்து யாராவது உள்ளே வந்திருக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்து சோதனை செய்கிறார். ஆனால் சோழனும் நிலாவும் ஒளிந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் நிலாவே ஏதோ ஒன்று கடித்து விடுகிறது நிலா கத்த சோழன் நிலாவின் வாயை பொத்துகிறார் அப்போது நிலா சோழனை ஒரு மாதிரியாக லவ் ரியாக்ஷன் கொடுக்கிறார். பிறகு யாரும் இல்லையென்று நினைத்து பெரியப்பா கேட்டை மூடிவிட்டு போய்விடுகிறார்.

அவர் சென்ற பிறகு சோழனும் நிலாவும் கேட்டை ஏறி குதித்து வெளியே வந்து காரில் கிளம்பி ஹோட்டலுக்கு திரும்புகிறார்கள். அங்கு நிலா, "உயில் கிடைத்துவிட்டது... இனிமே நம்ம வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது... நாளைக்கே வீட்டுக்கு போயிடலாம்" என்று மகிழ்ச்சியாக சொல்கிறார். அதற்கு சோழன், "நான் உங்க ரூம்லயே வந்து படுத்துக்குறேன்" என்று கேட்டாலும், நிலா அதை மறுத்து அவரை ரூமுக்கு அனுப்பிவிடுகிறார்.

சந்தோஷத்தில் சோழன்

ஆனால் கொஞ்ச நேரம் கழித்து இரவில் நிலா வெளியே வந்து பார்க்கும்போது சோழன் அவள் ரூம் வாசலிலேயே படுத்திருக்கிறார். "என்னாச்சு?" என்று கேட்டவுடன், "எவ்வளவு நேரம் கதவு தட்டினாலும் யாரும் திறக்கவில்லை" என்று சொல்கிறார். இதனால் நிலா அவரை உள்ளே வரச் சொல்லி தன் ரூமிலேயே படுக்க இடம் கொடுக்கிறார். நிலா படுக்கையில் படுத்துக்கொள்ள, சோழன் கீழே படுத்துக்கொள்கிறார். உயில் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம், நிலா ரூமிலேயே தங்கும் சந்தோஷம் மறுபுறம் என இரட்டிப்பு மகிழ்ச்சியில் சோழன் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+