பாக்கியாவை வெளியே போக சொல்லும் ராதிகா.. திணறும் கோபி.. எழில் கொடுத்த பதிலடி.. பரபரப்பான தருணம்
சென்னை: கோபியின் வீட்டிற்குள் வந்த ராதிகா, பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.
பாக்யாவிற்கு ஆதரவாக ஈஸ்வரி பேசுகிறார்.
கோபி ராதிகாவை சமாதானம் செய்ய பார்த்து கடைசியில் முடியாமல் போகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஏப்ரல் 20-ம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் கோபியை வீட்டில் இருக்க சொன்ன ஈஸ்வரி, அதற்கு கோபி சரிப்பட்டு வராது என்று கிளம்ப அப்போது வீட்டிற்குள் ராதிகா வருகிறார். ராதிகாவை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராதிகா கையில் பேக் இருப்பதை பார்த்து ஈஸ்வரி இது கோபியோட துணியா? நானே ஒரு ஆளை விட்டு எடுத்துட்டு வர சொல்லலாம் என்று நினைத்தேன். நீயே எடுத்துட்டு வந்துட்ட, அப்படி வச்சுட்டு போ என்று சொல்ல நான் எதுக்கு போகணும் என்று ராதிகா கேட்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் கோபி என்னை சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன். அவர் எங்க இருக்கிறாரோ அங்க தான் நானும் இருப்பேன் என்று சொல்ல அனைவரும் மேலும் அதிர்ச்சியாகின்றனர்.
உடனே ராமமூர்த்தி ஏமா ஏற்கனவே இங்க 1008 பிரச்சனை போய்கிட்டு இருக்கு, நீ வேற என்று கேட்க எல்லோருக்கும் நீங்க தானே நியாயம் சொல்லுவீங்க நீங்களே சொல்லுங்க, கட்டிண புருஷன் இருக்கிற வீட்ல தானே அவர் பொண்டாட்டி இருக்க முடியும் என்று கேட்க, ராமமூர்த்தி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். பிறகு எழில் இதுக்கு தானே பாட்டி வேண்டான்னு சொன்னேன்னு சொல்ல, பாக்கியா இப்பவாவது சொல்லுங்க நான் என்ன பண்ணனும் என்று கேட்க நீ வெளியே போ என்று ராதிகா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதைக் கேட்டு எங்க அம்மா எதுக்கு வெளியே போகணும் நீங்க தான் வெளியே போகணும் என்று எழில் சொல்ல, எங்க மருமக இங்க தான் இருப்பா, எங்கிருந்தோ வந்த நீதான் வெளிய போகணும் என சொல்ல ராதிகா கோபி என்னுடைய புருஷன் எங்க ரெண்டு பேருக்கும் சட்டப்படி கல்யாணம் ஆகி இருக்கு, இப்போ நான் தான் உங்க மருமகள் எந்த சம்பந்தமே இல்லாத அவ எதுக்கு இங்கே இருக்கணும் என்று கேட்கிறார்.
அதற்கு அதெல்லாம் எங்களுக்கு தெரியும். ஆனால் இப்பவும் பாக்கியா தான் என்னுடைய மருமகள். உன்னை ஒருநாளும் மருமகளா ஏத்துக்க முடியாது. அவளை வெளியே போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? என கேட்க, அதைத்தான் நானும் கேட்கிறேன் என்னை வெளியே போக சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்க அனைவரும் பதில் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்.
அப்போதும் கோபி எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து செழியனும் இனியாவும் என்னப்பா அமைதியாக இருக்கீங்க என கேட்க, அதற்கு கோபி ராதிகா ஒரு நிமிஷம் என் கூட வா என சொல்லி ரூம்பிற்கு அழைத்து சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அதற்கு ராதிகா நான் இங்கேதான் இருப்பேன். என்னுடைய வாழ்க்கையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று கோபமாக சொல்கிறார்.

அதற்கு கோபி நீ இந்த வீட்டில் இருக்கிறதெல்லாம் சரிப்பட்டு வராது. பாக்யா வேற இங்கே இருக்கா என சொல்ல, பாக்யா இருக்கிற இடத்தில நான் இருக்கக் கூடாதா என ராதிகா கேட்க, இல்லை நீ இருக்கிற இடத்திலே அந்த இடியட் இருக்க கூடாது என்று சொல்ல, அப்படின்னா அவளை வெளியே போக சொல்லுங்க நான் இங்கே தான் இருப்பேன் என்று ஷாக் கொடுக்கிறார்.
பிறகு ரூமில் இருந்து ராதிகா வெளியே வர கோபியும் பின்னாடியே வர ஈஸ்வரி என்ன கோபி பேசியாச்சா, இவ கிளம்புறா தானே என கேட்க, நான் எதுக்கு வெளியே போகணும். நான் இங்கேதான் இருப்பேன். நான் இங்கு இருக்கிறது பிடிக்காதவங்க வெளியே போகலாம் என சொல்லி அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications