கோபி எடுத்த முடிவு.. கண்கலங்கி அழும் செழியன்.. ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: செழியன் கோபி செய்த செயலை நினைத்து தனியாக அழுது கொண்டிருக்கிறார்.
கோபி மீண்டும் குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார்.

கோபியால் ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஏப்ரல் 25ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் செழியன் மொட்டை மாடியில் நின்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அங்கு வரும் எழில் எதுக்கு இப்ப அழுதுகிட்டு இருக்க என்று கேட்க, அப்பா ஏன் இப்படி பண்றாரு என்று செழியன் பேச, இதுக்கு எல்லாம் காரணம் உன் மீது தான். நீ அவரை அன்னைக்கு இந்த கூட்டிட்டு வராமல் அந்த வீட்டில போய் விட்டிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று திட்டுகிறார்.
அதற்குப் பிறகு கோபி அவருடைய நண்பனோடு உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா தெரிஞ்சுதான் இப்படி பண்றாளா? இல்ல தெரியாம பண்றாளா என்று எனக்கு தெரியல, அம்மா ராதிகாவை விட்டுட்டு நீ இந்த வீட்டிலேயே இருந்துருனு சொல்றாங்க. பாக்கியா அப்பவும் என்ன பண்றான்னு எனக்கு புரியவே இல்லை. என் பசங்க என்னை பாக்குற ஒரு அருவருப்பா பார்வையால எனக்கு அவமானமாக இருக்கு என்று புலம்புகிறார்.

அப்போது எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது போயிடலாம்னு தோணுது என சொல்ல, அவருடைய நண்பர் இதை எல்லாம் அவர்களே செஞ்சுடுவாங்க. ஒரு நாள் நடுரோட்டில் நிற்கப் போற. எல்லாத்துக்கும் காரணம் இந்த குடி தான். நீ இப்பவும் மறக்காம இதே குடிச்சிட்டு இருக்கியா என்று திட்டுகிறார் என்று கோபி கூறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த வீட்டில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்கியா இனியாவிடம் நீ நல்லா படிச்சு நல்ல காலேஜ் போகணும் என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது காலிங் பெல் அடிக்கிறது. ஈஸ்வரி கோபியா இருக்கும் என சொல்ல, கதவு திறந்து தான் இருக்கு எதற்கு பெல் அடிக்க போறாரு என வீட்டில் உள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா வெளியே போய் பார்க்க ஃபுட் டெலிவரிக்காக டெலிவரி பாய் நிற்கிறார். ராதிகா என்ற பெயரில் ஆர்டர் செய்திருப்பதாக சொல்கிறார்.

அப்போது கீழே இறங்கி வரும் ராதிகா நான் தான் ஆர்டர் செய்தேன் என சொல்ல, அதைக் கேட்டு டெலிவரி மேன் நீங்க அந்த வீட்டில் தானே இருந்தீங்க என கேட்க, அது வாடகை வீடு. இதுதான் சொந்த வீடு என சொல்ல, அதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து கோபம் அடைகிறார். பிறகு பாக்கியா வெளியே வர, அப்போது கோபி குடிபோதையில் எதிரில் வந்து நிற்கிறார். பிறகு ஈஸ்வரி இவங்க எந்த ரூம்ல இருக்காங்க என கேட்க அப்போது இனியா அவங்க அப்பா ரூம்ல தான் இருக்காங்க என்று சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications