பழனிச்சாமியின் அட்வைஸ்..பாக்கியா கேட்ட கேள்வி..அவமானத்தில் ராதிகா.. கோபி எடுத்த முடிவு
சென்னை: பாக்கியாவிடம் ஏதாவது கேள்வி கேட்டு கேவலப்படுத்த வேண்டும் என்று ராதிகா நினைத்து கடைசியில் பாக்கியாவிடம் அவமானப்படுகிறார்.
கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எழிலிடம் நலம் விசாரிக்கிறார்.
பாக்யாவுக்கு ஆதரவாக மீண்டும் பழனிச்சாமி அட்வைஸ் கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே மூன்றாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் செல்வி மற்றும் பாக்கியா இருவரும் கேண்டினில் இருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கே வந்து பாக்யாவை எப்படி ஏதாவது கேள்வி கேட்டு வெறுப்பேற்றலாம் என யோசித்தப்படியே வருகிறார்.
ஆனால் ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு முன்கூட்டியே செல்வி பதில் அளித்து ஷாக் கொடுக்கிறார். நீங்க பஞ்சாயத்து கூட்ட வசதியா எதுவும் இங்க நடக்கல என்று சொல்ல, சாப்பாடு தான் சுமாரா இருக்குன்னு எனக்கு ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என ராதிகா சொல்ல, உடனே பாக்கியா இங்க பாருங்க சாப்பாட்டுல ஏதாவது குறை இருக்கா இங்கே எழுதி வைக்கலாம்னு ஒரு நோட்டு வச்சிருக்கேன். ஆனா இதுவரைக்கும் ஒருத்தர் கூட எந்த குறையும் எழுதி வைக்கல என நோட்டை எடுத்து காட்டுகிறார்.
அடுத்து செல்வி காபி குடிக்கிறீங்களா? என கேட்க எனக்கு அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என்று ராதிகா சொல்ல, பாக்கியா நீங்க இருக்கிற வீட்ல உங்களுக்கு ருசியா சாப்பாடு கூட கிடைக்குதோ இல்லையோ? அவ்வளவு ஏன் ஒரு நல்ல காபி கிடைக்குதோ இல்லையோ இங்கே குடிச்சுக்கோங்க என்று சொல்ல, செல்வி உங்களுக்கு காபி வேணுமா வேணாமா என கேட்க, ஒன்னும் வேணாம் என கோபத்தோடு ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு கோபி தன்னுடைய நண்பனை வர வைத்து வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி போதையில் புலம்பி கொண்டிருக்கிறார். அவர் நீதானே இரண்டாவது கல்யாணம் பண்ணுன, அப்போ நீ இதை எல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என சொல்ல, நீ இப்படித்தான் சொல்லுவேன்னு தெரியும் உன்கிட்ட புலம்புறேன் பாரு என்று மேலும் புலம்பி கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு பாக்யா வர அங்கே பழனிச்சாமி தன்னுடைய தான் செய்த இனிப்பு பலகாரத்தை கொடுத்து பிறகு பாக்யாவிற்கு ஆறுதலாக பேசி அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் ஜெனியும் எழிலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி குடிபோதையில் வீட்டுக்கு வருகிறார். முதலில் எதுவும் பேசாமல் படி ஏற போக பிறகு சோபாவில் வந்து உட்கார்ந்தபடி ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார்.
ஜெனி எந்த பதிலும் சொல்லாமல் இருக்க எழிலிடம் அவருடைய வேலையை பற்றி பேச எழில் பதில் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். இந்த நேரத்தில் பாக்யா வீட்டிற்கு சுடிதாரில் வருவதை பார்த்து கோபி குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications