கோபியை போலவே இரண்டாவது கல்யாணம் செழியனுக்கு.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. கலங்கி நிற்கும் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 9ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மாலினி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செழியனிடம் கேட்க செழியன் அதிர்ச்சி அடைகிறார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி அனைவர் முன்னிலையிலும் குழந்தை குறித்த விஷயத்தை சொல்லி அமிர்தாவை கஷ்டப்படுத்துகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா இன்னொரு இடத்திற்கு கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க போன விஷயத்தை சொல்லி, அதை தான் தடுத்து நிறுத்தியதையும் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.
அதற்கு ராதிகா, பாக்கியா வேற என்னமோ பிளான் போடுறாங்க. நமக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தேடி தேடி போறாங்க என்று கோபப்படுகிறார்கள். அதற்கு கோபி இனிமே அவளால் எங்கேயும் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது. திரும்பவும் பழையபடி மிளகாய் பொடி, இட்லி பொடி தன் போட வேண்டும் என்று பொறாமையின் உச்சத்தில் பேசிக் கொண்டிருக்க ராதிகாவும் சேர்ந்து சந்தோஷப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து ஜெனி குழந்தையோடு வீட்டிற்கு வர எல்லோரும் ஆரத்தி எடுத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி ஜெனி இந்த குடும்பத்தில் மூத்த வாரிசு பெற்று கொடுத்துவிட்டா ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்ல, அதைக்கேட்டு எழில் அமிர்தாவின் முகம் மாறுகிறது. அதை கவனித்த பாக்கியா, அதான் ஏற்கனவே நிலா பாப்பா இருக்கா இல்ல என்று சொல்லி சமாளிக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஜெனி மற்றும் செழியன் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பாக்யா ஜெனிக்கு பால் எடுத்துட்டு வந்து கொடுத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியனுக்கு மாலினி போன் பண்ணி கொண்டே இருக்க, முதலில் செழியன் போனை கட் பண்ணி விட்டு பிரண்டு என்று சொல்லி சமாளிக்கிறார்.
பிறகு மீண்டும் மீண்டும் போன் செய்ய தனியாக போய் நான் உன்னிடம் பேச வேண்டும் என்று மாலினியிடம் சொல்கிறார். அதற்கு மாலினி வீட்டிற்கு வாங்க என்று சொல்ல வாங்க, வேண்டாம் வழக்கமா நாம சந்திக்கிற ரெஸ்டாரண்டுக்கு வா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
பிறகு இருவரும் ரெஸ்டாரண்டில் சந்தித்து கொள்கின்றனர்.
அப்போது செழியன் எல்லாத்தையும் இதோடு நிறுத்தி விடுவோம் என்று சொல்ல, அதற்கு மாலினி அதிர்ச்சி அடைகிறார். அதோட அப்படியெல்லாம் என்னால் விட முடியாது. நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும் என்று சொல்ல, அதுதான் எப்படி, என்ன மீனிங்ல? என்று கேட்க, அதற்கு மாலினி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்கிறார். அதை கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications