பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு வந்த திடீர் ஞானோதயம்.. ஈஸ்வரியிடம் கேட்ட கேள்வி.. ராதிகா எடுத்த சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் கோபி மீது ஓவராக உரிமை எடுத்துக் கொள்ளும் ஈஸ்வரியிடம் பாக்கியா சரியான கேள்விகளை கேட்டிருக்கிறார். இத்தனை நாட்களாக ரசிகர்கள் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை எல்லாம் இன்று பாக்கியா கேட்டிருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவும் சூப்பர் முடிவு எடுத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவை பார்க்க போனதை நினைத்து ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார். இந்த ராதிகா எடுத்த முடிவை நினைச்சு நான் இப்பதான் சந்தோஷமா இருந்தேன். ஆனால் நடிச்சிட்டு போயிருக்கா கோபியை நிரந்தரமா நம்மகிட்ட இருந்து பிரிக்கிறதுக்காகத்தான் அவ இப்படி பேசிட்டு போயிருக்க. எல்லாம் நடிப்பு என்று ஈஸ்வரி புலம்பி கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இதைக் கேட்டு கடுப்பான பாக்கியா கிச்சனிலிருந்து வந்து நானும் கொஞ்ச நாளா உங்களை பாத்துட்டு தான் இருக்கேன் நீங்க ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க உங்க பையனுக்காக எந்த நல்லதும் செய்யல. உங்க பேச்சை கேட்டு உங்க பையன் இருக்கணுங்கறதுக்காக தான் நீங்க அவருக்காக ஒவ்வொரு விஷயத்தை செய்யறீங்க.

உங்க பையன் 50 வயசில் என்னை டைவர்ஸ் பண்ணும் போது நீங்க அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுனீங்க. இந்த வயசிலேயும் உங்க பையன் உங்க பேச்சை கேட்கணும்னு என்ன அவசியம் இருக்கு? இப்பவும் உங்க பையனை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ள நினைக்காதீங்க. ரெண்டாவது கல்யாணம் பண்ணுனாரு அதுலயாவது அவர் ஒழுங்கா வாழ்ந்தாரா? அதுவும் இல்ல. அதுவும் பிரச்சனை தான்.

Baakiyalakshmi Serial vijay TV

உங்க பையனா உங்க கண்ட்ரோல்லையே வச்சிருக்கனும் என்றால் எதுக்கு கல்யாணம் பண்றீங்க. எதுக்கு ராதிகா வாழ்க்கை கெடுக்குறீங்க. நீங்க பண்ற ஒவ்வொரு விஷயத்திலும் நாளைக்கு பதில் சொல்லியே ஆகணும். அவர் இப்ப அவங்க மனைவியை பார்க்க போயிருக்காரு‌. அங்க போய் அவங்க முடிவு எடுத்து அவங்க லைஃபை எப்படி வாழணுமோ அப்படி வாழட்டும்.

Baakiyalakshmi Serial vijay TV

நீங்க தயவு செய்து எதிலும் தலையிடாதீங்க என்று கோபப்பட்டு பேசி விட்டு பாக்கியா செல்ல, இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி அதிர்ச்சியாகி நிற்கிறார். மறுபக்கத்தில் ராதிகாவின் அம்மா ராதிகாவின் அண்ணனிடம் பாக்கியா குடும்பத்தினர் எல்லோரும் ராதிகாவை கொடுமை செய்து வீட்டை விட்டு துரத்தியது போல பேச, அதனால் கோவமான ராதிகா ஃபோனை வாங்கி அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கல.

எல்லாமே நானே விருப்பப்பட்டு வந்ததுதான். இதுக்காக நீ வர வேண்டாம் என்று சொல்லி போனை வைக்கிறார். அந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு ராதிகா அம்மா கதவை திறக்க, கோபி வந்து நிற்க்கிறார். உள்ள வாங்க மாப்பிள்ளை என்று ராதிகா அம்மா கூப்பிடுகிறார்.

உள்ளே வந்த கோபி நீ வந்ததிலிருந்து நீ பேசிய எல்லா விஷயத்தையும் நான் நினைத்து பார்த்துட்டே இருக்கிறேன். அதுதான் என் மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கு. எனக்கு என்ன நடக்குதுன்னு புரியல நீ வா அங்க போகலாம் என்று கூப்பிடுகிறார்... உடனே வேண்டாம் நான் நீ வர வேணாம் நான் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க வந்துடுறேன். பழையபடி நம்ம சந்தோஷமா வாழனும் என்று சொல்ல, அதற்கு ராதிகா எதுவும் வேண்டாம்.

எங்கேயும் வர வேண்டாம் உங்களை நான் காட்டில் விட்டுட்டு வரல உங்க வீட்டுல தான் விட்டுட்டு வந்து இருக்கேன் உங்க மன நிம்மதிக்காக தான் நான் இந்த முடிவெடுத்திருக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்ல, கோபி இந்த முடிவு நிரந்தரமானதா? இல்ல தற்காலிகமானதா? என்று கேட்க, இதற்கான பதில் உங்களுக்கே தெரியும் என்று ராதிகா சொல்கிறார்.

படம் ரிலீஸ் அன்றே காதலியை கரம் பிடித்த நடிகர் கிஷன் தாஸ்.. ஆனந்தம் சீரியல் நடிகையின் மகன்தான்!
எனக்கு எதுவுமே புரியல என்று கோபி சொல்ல இங்கிருந்து போயிடுங்க. நீங்க வரவேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு கோபி ஏன் ராதிகா இப்படி எல்லாம் பேசுற? உன்னையும், மயூவையும் விட்டுடும் நான் எப்படி இருப்பேன் அடிக்கடி நான் வந்து பார்க்க வரலாமா? என்று கேட்க, அதற்கு ராதிகா நீங்க இங்க வரவே வேண்டாம். நாங்க சந்தோஷமா இருக்கணும் என்று நினைத்தால் எங்களை விட்டுடுங்க என்று சொல்லி விடுகிறார்.

இதனால் கோபி அங்கிருந்து கிளம்பி பாருக்கு சென்று குடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு அவருடைய நண்பர் செந்தில் வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+